Pages

Tuesday, April 7, 2015

மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் தமிழகத்தில் இன்று தொடங்க உள்ளது.


இந்தத் திட்டத்தின்படி, தடுப்பூசி மருந்துகள் வழங்காமல் விடுபட்ட இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட உள்ளது.  இதற்காக நாடு முழுவதும் 201 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களில் தொடர்ந்து ஒரு வாரம் இந்த மருந்துகள் வழங்கப்படும். முதல் கட்டமாக ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும். தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.