வ.சூரக்குடி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். டி.எஸ்.பி.முத்தமிழ் பள்ளி மலரை வெளியிட்டார்.
* திருப்புத்தூர்: மா.ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஏ.இ.இ.ஓ., மதிவாணன் தலைமை வகித்தார். ஆசிரியை முத்துலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் சான்றிதழ் வழங்கினார்.
* சிவகங்கை: கூட்டுறவுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சேவியர் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தான்யலட்சுமி பரிசு வழங்கினார். ஆசிரியை விஜயா வரவேற்றார். தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.
* தேவகோட்டை: இளங்குடி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா உதவி தொடக்க கல்வி அலுவலர் பால்ராஜ் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியை செல்வி அறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி நடந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.