தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் அறிவியல் ஆய்வக களப்பயணம் மேற்கொண்டனர். 8ம் வகுப்பு மாணவ,மாணவியர் அறிவியல் ஆய்வக களப்பயணமாக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் பேச்சு
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விலங்கியல் துறை பேராசிரியர் நாவுக்கரசு வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கி பேசுகையில்,8ம் வகுப்பு படிக்கும் நீங்கள் எந்த விசயத்தை அணுகினாலும் ஏன் என்று கேள்வி கேட்டு பதில் பெறுங்கள்.அப்போதுதான் உங்கள் அறிவு விரிவடையும் என்றார்.சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா ? என்று கேட்ட கேள்வி வந்ததே முதல் அறிவியல் கேள்வி என்று கூறினார்.ஐசக் நியூட்டன் போன்ற அறிவியலாலர்கள் அறிவியல் தொடர்பான நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்கு காரணமே அவர்கள் ஏன் என்று கேள்வி கேட்டதனால்தான் என்றார்.எனவே நீங்களும் சிறு வயதில் படிக்கும் காலத்திலேயே நிறைய கேள்விகள் கேட்டு பதில்கள் பெறுங்கள்.வருங்காலத்தில் கண்டிப்பாக அறிவியல் விஞ்ஞானிகள் ஆவிர்கள் என பேசினார்.
விலங்கியல்,தாவரவியல் துறை பார்வையிடல்
களப்பயணத்தின் தொடக்கமாக மாணவ,மாணவியர் விலங்கியல் துறையில் ஒரு செல் உயிரியிகளிலிருந்து பல செல் உயிரிகள் வரையும்,முதுகெலும்பற்றவைகளான புரோட்டோசோவா தொகுதியை சார்ந்த அமீபா ,பாரமீசியம் ,பிளாஸ்மோடியம்,பவளப்பாறைகள்,அஸ்கல்மன்திஸ் ,ஆர்த்ரோபோடா,ஆக்டோபஸ்,ஸ்டார் பிஷ்,சங்கு,சிப்பி,இறால்,நத்தை,முதுகெலும்பு உள்ளவைகளில் கடல் குதிரை,பச்சோந்தி,பல்லி ,ஆமை, மீன் வகைகள்,இருவாழ்விகளான தவளை,ஊர்வனவற்றில் பாம்பு வகைகளான விஷப்பாம்புகள்,விஷமில்லாப் பாம்புகள்,நல்லபாம்பு,ராஜநாகம்,பச்சைப்பாம்பு,ஓணான்,பறப்பனவற்றில் புறா,காகம்,மைனா ,மரங்கொத்தி,மீன் கொத்தி ஆகியவை உடல் உறுப்புகளின் எலும்புகளுடனும்,பாலூட்டிகலில் முயல்,பன்றி,எலி மற்றும் அவைகளின் கரு போன்றவைகளையும் ,எலும்பு வகைகள்,மனித இதய மாதிரி,டி என் ஏ ,ஆர் என் ஏ மாதிரிகளையும்,மைட்டோகாண்ட்ரியா ,மனித எலும்பு மண்டலம் தொடர்பான மாதிரியையும்,கரு உருவாவதை நுண்ணோக்கி வழியாகவும் பார்த்தும் அதன் பயன்களை கேட்டும் அறிந்து கொண்டனர்.தாவரவியல் துறையில் மூலிகை தோட்டத்தில் டெரிடொ பைட்டுகள்,பிரையொ பைட்டுகள் என தாவரங்களின் வகைகளையும்,நுண்ணோக்கிகள் மூலம் தாவரத்தின் மகரந்தப்பை,சூல்பைகளையும் பார்வையிட்டும் அதன் பயன்பாடுகளையும் அறிந்து கொண்டதுடன்,மூலிகை தோட்டம் சென்றுமலேசியன் திப்பிலி,அம்மான் பச்சரிசி,சிறுநங்காய்,முடக்கத்தான்,முப்பிரண்டை,கரிசலாங்கண்ணி,
நொச்சி,வசம்பு ,ஓமவல்லி,ஆடாதொடா,தவசி முருங்கை,மஞ்சள்,மணத்தக்காளி,பெரியநெல்லி,தும்பை,அருகம்புல்,
சங்குபூ,
செம்பருத்தி,குப்பைமேனி உட்பட பல்வேறு மூலிகை செடிகளை நேரடியாக பார்த்தும் அதன் பயன்களை அறிந்தும்,தாவரவியல் விஞ்ஞானிகளை படங்களின் மூலமாக அவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டும் பயன்பெற்றனர்.
வேதியியல்,இயற்பியல் ஆய்வகங்களை பார்வையிடல்
வேதியியல் ஆய்வகத்தில் உப்பு தொடர்பான சுடர் சோதனைகள்,பருமனரி பகுப்பாய்வு செய்து காட்டல் ,ஆய்வக உபகரணங்களான கூம்பு குடுவை,பியூரெட்,பீப்பெட்,சோதனை குழாய்,கண்ணாடி தட்டு,உப்பு எடுக்கும் கரண்டி,கண்ணாடி கலக்கி, புன்சென் அடுப்பு , நிற மாற்றத்தை சரியாக காட்டும் போர்செளின் டை , 200 மி.லி.பீக்கர் ,வீழ்படிவு சேகரிக்கும் சோதனை குழாய் போன்றவற்றையும்,நடுநிலையாக்கல் வினைகளையும்,வீழ்படிவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் அதற்கான உபகரணங்கள் எப்படி செயல்படுத்த படுகிறது என்பதையையும் நேரடியாக செய்து காட்டல் மூலம் கற்று கொண்டனர். இயற்பியல் துறையில் காந்தங்கள்,வான்நோக்கி,மின்நோக்கி,தனி ஊசல்,நிறப்பிரிகை,ஆடிகள்,திருகு அளவி,ஊசல் கடிகாரம் மற்றும் நேனோ தொழில் நுட்பங்கள் போன்றவை நேரடியாக செய்து காண்பித்தும் மாணவர்களால் செய்தும் பார்க்கப்பட்டது.கணினி துறையில் எவ்வாறு கணினியை இயக்குவது,அதில் உள்ள முக்கிய பகுதிகள் என அனைத்துக்கும் விரிவாக நேரடியாக செயல் விளக்கங்கள் மாணவ,மாணவியர்க்கு விளக்கப்பட்டது.
பள்ளி மாணவியின் பேச்சு
ஆய்வக களப்பயணம் குறித்து நிறைவாக மாணவி சொர்ணம்பிகா பேசுகையில் கல்லூரியில் படித்தால் கூட ஒரு துறை பற்றி மட்டும்தான் அறிய முடியும்.ஆனால் 8ம் வகுப்பு படிக்கும்போதே நாங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து அறிவியல் துறைகளையும் அறியும் வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார். பள்ளியின் சார்பாக மாணவி கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் மற்றும் முத்து லெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.