அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் "இ-பே ரோல்' முறையை சீரமைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாநிலக் கருவூலத் துறை ஊதிய விவரங்களை இ-பே ரோல் சிஸ்டம் (ங்-ல்ஹஹ் ழ்ர்ப்ப் ள்ஹ்ள்ற்ங்ம்) என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்வதை அறிமுகப்படுத்தியது.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு
இ-பே ரோல் மூலம் ஊதியம் வழங்கப்பட்டது. இதனால், மார்ச் மாத ஊதியம் தாமதமாக ஏப்ரல் 11-ஆம் தேதிதான் வழங்கப்பட்டது.
பி.எப்., கடன், சிறப்பு சேமநல நிதி, மருத்துவக் காப்பீடு, பங்களிப்பு ஓய்வூதியத் தொகை, கோ-ஆப்டெக்ஸ் ஆகிய அரசுப் பிடித்தங்கள் அனைத்தும் இந்த முறையில் வழக்கம்போல பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால், உள்ளூர் பிடித்தங்களான அஞ்சலக தொடர் இட்டு வைப்புத் தொகை, காப்பீட்டுத் தொகை, கூட்டுறவுச் சங்கப் பிடித்தங்களை முன்பு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் பிடித்தம் செய்து மொத்தமாக காசோலைகளாக அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கி வந்தனர்.
ஆனால், இ- பே ரோல் சிஸ்டம் என்ற இணையதளத்தில் உள்ளூர் பிடித்தங்களை நேரடியாக செலுத்த வழிவகை செய்யப்படவில்லை.
இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அஞ்சலகம், காப்பீட்டு அலுவலகம், கூட்டுறவுச் சங்க அலுவலகங்களில் பணத்தை நேரடியாக செலுத்தி ரசீதுகளை தங்களது துறை அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள்கூறியது:
உள்ளூர் பிடித்தங்களையும்
இ- பே ரோல் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். மாநிலம் முழுவதும்
இ-பே ரோல் இணையதளத்தை அனைவரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது ஏற்படும் தாமதம், கணினி இடர்பாடுகளை நீக்கிட அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தியோ, விரைவுபடுத்தியோ மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.