அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு,'கவுன்சிலிங்' நடத்தி பணி இட மாறுதல் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைக் கல்வியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்டுவரப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பாடத்துக்கு வரவேற்பு அதிகரித்ததால், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த பாடத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
மற்ற பாட ஆசிரியர்களை போன்றே, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றபின், கடந்த 2008ல், காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர்.
தேர்ச்சி பெறாதோரின் நியமனம் செல்லாது என, நீதிமன்றம் அறிவுறுத்தியதால், 652 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், முன்னுரிமை பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்த்து, இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில், பணி நியமன கவுன்சிலிங் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், தங்களுக்கு இடமாற்ற கவுன்சிலிங் நடத்த கோரியுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டோரை பணியில் நியமிக்கும் முன், கவுன்சிலிங் நடத்த கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.