Pages

Saturday, April 4, 2015

ஓய்வு ஊதியம் எளிதாக பெற.... இந்த 'டீடெய்ல்ஸ்' மட்டும் கொடுங்க, போதும்!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியம் பெறுவதை எளிதாக்குவதற்காக புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ‘பென்ஷன் பைலர் ஸ்கீம்'' என்ற திட்டத்தின் கீழ் ஓய்வு ஊதியம் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியம் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்று, வேலையில் சேர்ந்த சான்று,வேறுவேலையில் சேராமல் இருப்பதற்கான சான்று, மறு திருமணம் அல்லது திருமணம் ஆகாததற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வு ஊதியம் அளிக்கும் வங்கி அதிகாரிகள் முன்பு ஓய்வு ஊதியதாரர் நேரிலும் ஆஜராகலாம். நோய் உள்பட தவிர்க்க முடியாத காரணங்களால் வாழ்வுச் சான்றை பெறமுடியாமல் போய்விட்டால் அவர்களை வீட்டிலோ அல்லது மருத்துவ மனையிலோ வங்கி அதிகாரி நேரில் சந்தித்து வாழ்வுச் சான்றை அளிக்கலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வருகிறது. தற்போது, ஓய்வு ஊதியதாரர்களின் பிரச்னைகளை தீர்ப்பது, ஓய்வு ஊதியம் வழங்குவதை எளிமைப்படுத்துவது குறித்து அரசுக்கு கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குநர் கடிதம்எழுதியுள்ளார். அதில் மாவட்ட வாரியாக ஓய்வு ஊதியம் வழங்கும் அலுவலகங்களிலும், ஓய்வு ஊதியம் அளிப்பதை கண்டறிய சாப்ட்வேர் மற்றும் தவகல் மையம் இணைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் ஓய்வு ஊதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் வாழ்வுச் சான்று சமர்ப்பிப்பது ஓய்வு ஊதியத்தை தாமதம் இல்லாமல் வழங்குவது போன்ற பணிக்காக ஓய்வு தாரரின் ஆதார் எண் இணைப்பது உள்ளிட்டவற்றை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதன்படி ஓய்வு ஊதியம் மற்றும் குடும்ப ஒய்வு ஊதியம் பெறும் அனைவரும் இந்தமாதம் முதல் ஜூன் மாதம் வரையில் போட்டோவுடன் கூடிய வாழ்வுச் சான்றையும், புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள முறையில் கூடுதல் தகவல்கள், தேவையான சான்றுகள் போன்றவற்றை ஓய்வு ஊதியம் வழங்கும் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவை அரசு அதிகாரியால் சான்றொப்பம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஜூலை மாதம் நேரிலும் ஆஜராகலாம்.மேலும் பொதுத்துறை வங்கித் திட்டத்தின் படி ஓய்வு ஊதியம் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் தேவையான சான்றிதழ்களை நவம்பர் மாதம் ஓய்வு ஊதியம் வழங்கும் வங்கிப் பிரிவில் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.