ரூ.68 செலுத்தி ஒரு ஜிபி 3ஜி இணையதள பெறலாம் என்று பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல்லின் சென்னை தொலைத்தொடர்பு வட்டம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 3ஜி டேட்டா எஸ்டிவி எனப்படும் சிறப்புவிலை கட்டண சேவையை பிரபலப்படுத்த குறைந்த விலையில் 3 ஜி சேவைகளை வழங்க முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு ஜிபி 3ஜி சேவையை ரூ 68 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதன் செல்லுபடி காலம் 10 நாட்கள் ஆகும்.டேட்டா எஸ்டிவி புதிய சலுகையை ஏற்கனவே இருக்கக்கூடிய 1 ஜிபி சிறப்பு கட்டண சேவையிலும் பயன்படுத்தலாம். இதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. இந்த ஆரம்ப கால சலுகை ஏப்ரல் 1 முதல் 60 நாட்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குனர் என்.கே.குப்தா கூறும்போது, “புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டேட்டா எஸ்டிவி சலுகை கைபேசி மூலம் இணையத்தை பயன்படுத்துவதை குறைந்த விலையில் சாத்தியமாக்கும். ரோமிங் கட்டணமில்லாமல் இணையச்சேவை வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான 3ஜி கட்டமைப்பு பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளது” என்றார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.