Pages

Wednesday, March 25, 2015

கல்வித்தகுதி தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்ட ஓவிய ஆசிரியர் போட்டித் தேர்வு

தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், விளையாட்டு, இசை ஆகியவற்றில் பகுதி நேர ஆசிரியர்கள் 6,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஓவிய ஆசிரியர்களாக உள்ளனர்.

இவர்கள் முழுநேர ஆசிரியராக நியமனம் பெற, கடந்த ஜனவரியில் போட்டி தேர்வு அறிவிப்பை டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வு ஜூன் 6ல் நடக்க உள்ளது. அறிவிப்பில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்தவிதமான கல்வித்தகுதி தேவை என அறிவிக்கவில்லை.

ஓவிய ஆசிரியர் நல்லகாசிராஜன் கூறியதாவது: இத்தேர்வு ஓவிய அறிவும், ஓவிய கல்வித்திறனையும் அடிப்படையாக கொண்டிருப்பதால், எந்தவித நிபந்தனையும் இன்றி, அனைவரையும் பங்கேற்க வாய்ப்பு தர வேண்டும்.

வரைதல், வண்ணம் தீட்டுதல் குறித்தும் எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து டி.ஆர்.பி.,க்கும் தெரியப்படுத்தியுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.