Pages

Friday, March 27, 2015

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ள, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமைச் செயலர் ஞானதேசிகன், அனைத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்ரல், முதல் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது.
இத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு, தனி எண் தரப்படும். ஒவ்வொரு மாதமும், கருவூலத்திற்கு அனுப்பும் சம்பள பட்டியலில், அந்த எண் குறிப்பிடப்பட வேண்டும்.அவ்வாறு எண் பெறாதவர்கள், அந்த எண்ணை பெற்று வழங்குவதற்கான காலக்கெடு, பிப்ரவரியுடன் முடிந்தது. தற்போது, மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.அதுவரை அவர்களின் சம்பள பட்டியல் ஏற்கப்பட்டு, ஊதியம் வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளவர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.புதிதாக பணியில் சேருவோருக்கும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான, தணி எண் உடனே வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை, 15 நாட்களுக்கு ஒரு முறை, அரசுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.