Pages

Saturday, March 28, 2015

பொதுத்தேர்வில் பழைய வினாத்தாள்: வரிசை மாறாமல் 'அப்படியே' கேள்விகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 திருப்புதல் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள், 'அப்படியே' பொதுத்தேர்விற்கும் வழங்கப்பட்டது. பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ல் துவங்கி 26 ல் முடிந்தன. இத்தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. ராமநாதபுரத்தில் சில பாடங்களுக்கான வினாத்தாள் 'வாட்ஸ் அப்'ல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் மற்ற பாடங்களுக்கு அவசரகதியில் மாற்று வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் நேற்று முன்தினம் புதிய வினாத்தாள் அடிப்படையில் உயிரியல் தேர்வு நடந்தது. இந்த வினாத்தாளில், கடந்த பிப்ரவரியில் நடந்த திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் வரிசை எண் மாறாமல் அப்படியே கேட்கப்பட்டன. 'திருப்புதல் தேர்வு-2015' என இருந்த இடத்தில் '1511041 ஆர்டி' எனவும்; முடிவில் 'வெற்றி பெற வாழ்த்துக்கள்' எனவும் ஓரிரு மாறுதல் மட்டும் இருந்தது. பழைய கேள்வித்தால் 'அப்படியே' வந்ததால் மாணவர்கள் குஷியாகினர். இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் இடம்பெறும் 40 சதவீத கேள்விகள் பொதுத் தேர்வுக்கு வரும். ஆனால் ஒரு மாதத்திற்கு முன் நடந்த திருப்புதல் தேர்வு கேள்வித்தாளை அப்படியே வழங்கி இருப்பது கல்வித்துறையின் இயலாமையை காட்டுகிறது' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.