Pages

Sunday, March 22, 2015

தனியார் பள்ளி கண்காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்து அதிரடி!

ஓசூரில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த, 18ம் தேதி நடந்த பிளஸ்2 கணித தேர்வில், தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த, ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர், கணித வினாத்தாளை, மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்தனர்.
அதை, சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பினர். இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் பணியாற்றி வந்த தனியார் பள்ளியில், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய, 68 ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக, நாளை நடக்கும், பிளஸ் 2 தேர்வுக்கு, ஓசூர் தனியார் பள்ளி யில் உள்ள, 44 தேர்வு அறைகளுக்கு, தலா இருவர் வீதம், 88 ஆசிரியர்களும், கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் உள்ள, 25 தேர்வு அறைகளுக்கு, தலா இருவர் வீதம், 50 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆசிரியர் பயிற்றுனர்களும், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், நாளை நடக்கும் தேர்வு முடிந்த பின், மீண்டும் மாற்றப்படுவர் என, சி.இ.ஓ., ராமசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.