Pages

Monday, March 2, 2015

நேரில் வர சொல்லி ஓய்வூதியர்களை படுத்தாதீங்க: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

ஓய்வூதியர்கள், தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க, நேரில் வருமாறு வங்கிகள்கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.ஆயுள் சான்றிதழ்:அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. 

இந்த தொகையை பெற, ஆண்டுதோறும் ஓய்வூதியர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை, சம்பந்தப்பட்டவங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். வயது முதிர்வின் காரணமாக, ஓய்வூதியர்களில் சிலரால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஆயுள் சான்றிதழை வழங்க முடிவதில்லை. எனினும், அவர்களை கட்டாயம் நேரில் வருமாறு, வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, ஓய்வூதியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
கட்டாயம் இல்லை:
இதையடுத்து, 'தக்க அதிகாரிகள் கையொப்பமிட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் ஓய்வூதியர்களை, நேரில் வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது' என, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆதார் அடிப்படையிலான, அதிகாரிகள் கையொப்பமிடப்பட்ட ஆயுள் சான்றிதழ்களை வழங்கினால், ஓய்வூதியர்கள் வங்கிகளுக்குநேரில் சென்று ஆஜராக வேண்டிய கட்டாயம் இல்லை எனவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.இ - மெயில் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு:மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அலுவல் சம்பந்தமான முக்கிய ஆவணங்களை, இ - மெயில் எனப்படும் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். உயரதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை, அனைத்து தரப்பு ஊழியர்களும், தகவல் பரிமாற்றத்திற்கு பெரும்பாலும் தனியார் மின்னஞ்சல்களையே பயன்படுத்துவதால், அரசின் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில், அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடன், அமெரிக்க அரசு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் மின்னஞ்சல் செயல்பாடுகளை உளவு பார்ப்பதாக, திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இதையடுத்து, மத்திய அரசின் கீழ் செயல்படும், 'இம்ப்ளிமென்டிங் ஏஜன்சி' எனப்படும் ஐ.ஏ.,வின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள, பிரத்யேக மின்னஞ்சல் சேவை மட்டுமே, அரசு ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் இரண்டு 'லாகின் ஐ.டி.,' தரப்படும். ஒன்று அவர்களின் பெயரிலும், மற்றொன்று அவர்களின் பதவியை குறிப்பிடும் வகையில் இருக்கும். அலுவல் சார்ந்தபணிகளுக்காக, பதவியை குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரியையும், சொந்த வேலைகளுக்காக, பெயரை குறிக்கும் மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பில் வெளிப்படை :
ஒவ்வொரு துறையிலும், காலிப் பணியிடங்களை நிரப்பும் போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை, சம்பந்தப்பட்ட துறை மற்றும் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை கடைபிக்க முடியும் எனவும், மத்திய அரசுதெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.