தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சிக்கான ஈடுசெய் விடுப்பிற்கான அரசாணை விவரம் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SSTA வின் 6 மாத கோரிக்கைகளில் ஒன்று, வெற்றிகரமாக நிறைவேறுகின்றது. ஆகஸ்ட் 2014 ல் இருந்து கடந்த 6 மாதங்களாக SSTA மாநில தலைவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநரை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களைப் போல தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவிலான ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை வைத்து பள்ளி கல்வி அரசாணையை திரட்டி இயக்குனரிடம் அளித்து தொடக்க கல்வித்துறைக்கும் வழங்க தொடர்கோரிக்கை வைக்கப்பட்டது .
SSTA மாநில பொறுப்பாளர்கள இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரை சந்தித்த விவரங்கள் நமது வலைத்தளத்திலும் மேலும் அனைத்து கல்விசார் இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் நாம் அறிந்ததே. அதன் தொடரச்சியாக தற்போதைய அரசாணை வெளியிடப்படுகிறது.
நம் கோரிக்கை வெற்றி பெற பிற தோழமை இயக்கங்களும் வலியுறுத்தின ஆசிரியர்கள் உரிமைக்கு ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஆசிரிய சங்கங்களுக்கும் நமது SSTA சார்பாக நன்றி...நன்றி .. நன்றி ... என்றும் ஆசிரியர்களுக்கான SSTA
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.