தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ.41, 215.57 கோடியாகவும், ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்கள் குறித்த செலவினத்துக்கான ஒதுக்கீடு ரூ.18,67.86 கோடியாகவும் இருக்கும்.
இது வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் சம்பளம்-ஓய்வூதியம் குறித்த செலவுகள் மொத்த வருவாய்ச் செலவுகளில் 40.65 சதவீதமாகும். அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய செலவினங்களின் காரணமாக, வரும் நிதியாண்டிகளில் இதன் வளர்ச்சி விகிதம் முறையே 11, 25 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வரும் 2017-18-ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.