பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கானசெய் முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன்படி பள்ளிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.
‘ஏ‘ பிரிவில் இடம் பெற்றிருந்த பள்ளிகளுக்கு பிப்ரவரி 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையிலும், ‘பி‘ பிரிவில் இடம் பெற்றிருந்த பள்ளிகளுக்கு பிப்ரவரி 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும் 245 மையங்களில் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 8 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இது போல் பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 25-ந் தேதி தொடங்கி 27-ந் தேதியுடன் நிறைவுபெற்றது. பின்னர் செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியலிடப்பட்டு, அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியது. இந்த பணியானது கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 10 ஆசி ரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி விரைவில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.