Pages

Wednesday, March 18, 2015

உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வணிகவியல் - கணினி பிரிவு, வணிகவியல் - சர்வதேச வணிகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு, உதவி பேராசிரியர் பணிக்கு, நேரடி நியமன பணி, 2013ல் துவங்கியது.

ஒரு பணியிடத்துக்கு ஐந்து பேர் என்ற விகிதத்தில், தேர்வானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது; 43 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

கணினி தொழில்நுட்பத்துக்கு யாரும் தகுதி பெறவில்லை. வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை டி.ஆர்.பி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.