தாய்மொழியில், தொடக்க கல்வி வழங்குவதை கட்டாயமாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட, ’தாய்மொழி கல்வி’ மசோதா, வரும் 20ம் தேதி, கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சபாநாயகர் திம்மப்பா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில், கூட்டத்தொடர் ஆலோசனை கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், தாய்மொழி கல்வி மசோதாவை, வரும் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடரில், ஐந்து நாட்கள் பட்ஜெட் மீதான விவாதமும், மற்ற நாட்களில் கேள்வி நேரம், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், மார்ச் 30ம் தேதி, முதல்வர் சித்தராமையா பதிலளிக்கவும், ஒருமித்த கருத்து வெளியானது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.