Pages

Tuesday, March 3, 2015

பிளஸ் 2 தேர்வு நடக்காத நாட்களில் பிளஸ் 1 ஆண்டுத்தேர்வு நடத்த முடிவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 5) துவங்கி, மார்ச் 28ல் முடிவடைகிறது. இதற்கிடையில் மார்ச் 7,14, 21(சனி) 8, 15, 22 (ஞாயிறு) வார விடுப்பு நாட்கள் வருகிறது. மார்ச் 11, 12, 17, 19, 24, 25, 26 ஆகிய தேதிகளில் பிளஸ் 2 தேர்வுகள் இல்லை. அந்த நாட்களில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மார்ச் 11ல், பிளஸ் 1 மாணவர்களுக்கு மாவட்ட அளவில் ஒரே மாதிரியான வினாத்தாளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 தேர்வுக்கு அறை கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியர்கள் செல்கின்றனர். 
அவர்கள் தங்கள் பள்ளியில் பணியில் இருக்கும்போது தேர்வை நடத்தினால், கண்காணிப்பாளரை நியமிப்பதில் சிக்கல் இருக்காது. பிளஸ் 1 தேர்வுகளை மார்ச் 31 ல் முடிக்குமாறு அட்டவணை தயாரிக்கப்படுகிறது" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.