Pages

Tuesday, March 31, 2015

12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச், 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளி யியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.
விடை எழுத முடியாமல் தவிப்பு:
தோட்டக்கால் பயிர் குறித்து இடம் பெற்ற, 47வது கேள்விக்கு, மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். ஏனெனில், பாடப்புத்தகத்தில், நன்செய் பயிர் குறித்து தான் அவர்கள் படித்துள்ளனர். நன்செய் பயிர் தான் தோட்டக்கால் பயிர் என்பது பாடத் திட்டத்தில் இல்லை. இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. தவறான வினா குறித்த செய்தி, நமது நாளிதழில் மார்ச், 21ம் தேதி செய்தி வெளியானது.
வினாக்கள் குளறுபடி:
இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், வேளாண் செயல்முறைகள் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில், வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில், நன்செய் பயிர் குறித்த, 10 மதிப்பெண் கேள்வி; ஒரு மதிப்பெண்ணுக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விக்கு, மொத்தம், 12 கருணை மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.