திருவண்ணாமலையில் ஆசிரியையின் முயற்சியால் அரசுப் பள்ளிக்கான கட்டிடம் கட்டும் பணி தீவீரம் அடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது துளுவபுஷ்பகிரி என்னும் கிராமம். வானம் பார்த்த பூமி. இக்கிராமத்தில் உள்ள பள்ளியானது (ஆஸ்பெஸ்டாஸ்) கல்நார் ஓட்டினால் ஆன கட்டிடம். அந்த பள்ளி 1952ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளமாகிவிடும். வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் உஷ்ணம் தகிக்கும். இருப்பினும் இவைகளையும் தாண்டி அந்தப் பள்ளிக் குழந்தைகள் தரமாக படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை மீனாராஜன் பள்ளிக்காக புதியக் கட்டிடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டார். அவரின் முயற்சியைக் கண்ட அக்கிராமப் பெரியவர் கோவிந்தசாமி ஆசிரியர்( ஓய்வு) தன்னிடம் இருந்த 20 செண்ட் நிலத்தை தானமாக பள்ளிக்கு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசிரியை மீனாராஜன் சென்னை ரோட்டரி மைலாப்பூர் அப்டவுன் உதவியுடன் 2 ஆயிரத்து 425 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட முயற்சிகள் எடுத்து மேற்கூரை ( roofing ) வரை வேலை முடிந்துள்ளது.. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு கல்வி பயிலும் ஏழை, நடுத்தட்டு குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளாதாக அமையும் என்ற நோக்கில் வகுப்பறைகள் மட்டுமின்றி கணினி வசதியுடன் கூடிய ஒலி- ஒளி அமைப்புடன் கூடிய அறை அமைக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
ஏழைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற நிலை மாறி பணக்காரர்களும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கிராமத்தை சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டி முடிக்கப் படும்போது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுவார்கள். மேற்கூரை வரை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் மேலும் உள்கட்டமைப்பு, கழிவறை, சுற்றுசுவர், மதிய உணவு சமையலறை போன்றவைகள் கட்டி முடிக்க இன்னும் ரூ. 15 லட்சம் வரை தேவைப்படுவதினால் உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள். தொடர்புக்கு- மீனாராஜன் - 09600142437, இமெயில் முகவரி - dmeenarajan@gmail.com காசோலை அனுப்புவோர் கீழ்காணும் பெயரில் காசோலையை எடுக்கவும்: SSA Aided Primary School,Thuluvapushpagiri Address; D.Meenarajan 28/2,12th Avenue, vaigai Colony, Ashok Nager, chennai-83 வங்கியில் பணமாக செலுத்துவோர் கீழ்காணும் கணக்கில் செலுத்தலாம், SSA Aided Primary School, Thuluvapushpagiri, State Bank Of India Santhavasal Branch, A/C .NO;32417332164 IFSC NO; SBIN0004879..
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.