நீலகிரி மாவட்டம் பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது சலீம். நேற்று காலை பள்ளிக்கு குடிபோதையில் வந்துள்ளார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பள்ளிக்கு சென்றார். வீட்டில் இருந்தவரை வரவழைத்து கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். அப்போது முகமது சலீம் போதையில் இருந்தது தெரிய வந்த தால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment