Pages

Sunday, February 8, 2015

ஒவ்வொரு ஆண்டும் தகுதித்தேர்வு நடக்குமா?


கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில், 2010ம் ஆண்டு, கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, இனி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நியமிக்க முடியும்.

நியமனம்: இதன் அடிப்படையில், தமிழக அரசு, கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பல லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், ஒரு சில மாதங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டிலும், தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், உடனடியாக அரசு பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, ஆசிரியர்களிடையே ஆர்வம் அதிகரித்தது. தேர்ச்சி பெற்றால் அரசு வேலை என்ற குறிக்கோளில், ஏராளமானோர் தீவிரமாக பயிற்சியெடுக்க துவங்கினர். இதனால், அந்த ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். 10 ஆயிரத்திற்கும் குறைந்த காலிப்பணியிடங்களே இருந்த நிலையில், அனைவருக்கும் அரசு வேலை தர முடியாத சூழல் உருவானது.

இதற்காக தரம் பிரிக்கும் முயற்சியில், 'வெயிட்டேஜ்' முறை அமல்படுத்தப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகள் குறித்து, நீதிமன்றத்தில் தொடர்ந்த பல்வேறு வழக்குகளின் காரணமாக, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் தாமதமாகிக்கொண்டே இருந்தது. வெயிட்டேஜ் முறை மாற்றியமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.