இணையத்தின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் பயனாளர்களுக்கு(Internet Banking User) அதிர்ச்சி அளிக்கும் வகையில் க்ரைடக்ஸ் ட்ரோஜன் (Cridex Trojan) என்ற கம்ப்யூட்டர் வைரஸ் இண்டர்நெட்டில் வேகமாக பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோஜன்(Trojan) வகையைச் சார்ந்த இந்த கம்ப்யூட்டர் வைரஸ் இணைய வங்கி பயனாளர்களின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை திருடிவிடும் அபாயம் உள்ளதாக இ-பேங்கிங் அட்வைஸரி ஏஜென்ஸியான Computer Emergency Response Team of India (Cert-In) தெரிவித்துள்ளது.
பென்டிரைவ் போன்ற ரிமூவபிள் டிவைஸ்கள் மூலம் வேகமாக பரவும் இந்த வைரஸ் பயனாளர்களின் கணக்கு ரகசியங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக திருடிவிடுமாம்.
இந்த வைரஸை தடுக்க என்னதான் வழி :
இது போன்ற வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரில் உட்புகுவதை தடுக்க பயர்வால்(Firewall)-ஐ Gateway Level-க்கு Enable செய்து வைத்திருக்க வேண்டும்.
நம் கம்ப்யூட்டரில் உள்ள ஓ.எஸ். patches மற்றும் fixes-களை ரெகுலராக அப்பேட் செய்ய வேண்டும். அதேபோல், ஆன்டி-வைரஸ்(Anti-Virus) மற்றும் ஆன்டி-ஸ்பைவேர் (Anti-Spyware signatures)-களையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.
இணைய வங்கி கணக்கிற்கு கடினமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும்.
மின்னஞ்சல்களில்(E-Mail) வரும் அட்டாச்மெண்ட்களை ஓப்பன் செய்யும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
தேவையற்ற அல்லது தெரியாத சாப்ட்வேர்களை டவுண்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட செயல்முறைகளின் மூலம் 'க்ரைடக்ஸ் ட்ரோஜன்' வைரஸ்கள் நமது கணினியை தாக்கமால் பாதுகாக்கலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.