ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன்.
முதுகலை பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண் பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில் படித்துள்ளதால் விதிகள்படி பணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் 2013 ஜன.,20 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம், ராமநாதன் ஆஜராகினர்.
நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும் எம்.ஏ., ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்
படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.
Kindly upload the judgment Copy...
ReplyDelete