தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று (07.02.2015) நடைபெற்றது. மாநிலத்தலைவர் திரு.கே.சம்பத் அவர்கள் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் திரு. கே.கார்த்திகேசன் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் திருமிகு.ஆர்.ஏஞ்சல்வீணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயல்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் திரு.எம்.மரியம்பிரகாசம் விளக்கினார். முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் திரு.ந.மகேசு வரவேற்றார். மாநிலத் துணைத்தலைவர் திரு.எஸ்.அருள்செல்வம் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:
1. 1000 ஆசிரியர்பயிற்றுநர்களைப் பள்ளிக்கு பட்டதாரிஆசிரியர்களாகப் பணியிடமாறுதல்
செய்யவேண்டும்.
2 .FTA தொகையினை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
3. மூன்றாண்டு விதியினை இரத்து செய்வதுடன், பொதுகலந்தாய்வு நடத்த வேண்டும்.
4. பணிநிரவல் மற்றும் தற்போது செய்துள்ள பணியிட மாறுதலை (Paper Transfer ) இரத்து
செய்து ஜுன் '2014ல் உள்ள நிலை தொடர வேண்டும்.
5. CPS திட்டத்தில் உள்ள MISSING CREDIT சரிசெய்ய வேண்டும்.
6. CPS திட்டத்தினை இரத்து செய்துவிட்டு, GPF முறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
7. அரசாணை நிலை எண்:78,பள்ளிக்கல்வித்துறை,நாள்:18.03.2009னை முழுமையாக
நடை முறைப்படுத்த வேண்டும்.
8. புதிதாக ஆசிரியர்பயிற்றநர்களை நியமனம் செய்து,காலிப்பணியிடங்களை நிரப்பி,
பணிச்சுமையினை குறைக்க வேண்டும்.
9.ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு பதவிஉயர்வு மூலம் மேற்பார்வையாளர் பதவி வழங்க
வேண்டும்.
10. ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு கருவூலம் வழியாக ஊதியம் வழங்க வேண்டும்.
thanks tnkalvi, try to post meeting photo.
ReplyDelete