Pages

Tuesday, February 10, 2015

40 வயதான பெண்களுக்கு தேவைப்படும் வைட்டமின்கள்

வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக 35 வயதை நெருங்கும் பெண்கள் சாப்பிட வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஆகவே இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை 40 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலை நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள முடியும்.
40 வயதான பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி, கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வைட்டமின் பி முக்கியமானதாகும். ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால், இச்சத்துக்களைப் பெறலாம். உடலில் ஏற்படும் சோர்வை நீக்க தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு நிற்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கும். இறுதி மாதிவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும்.
இதனால் ஏற்படும் இரத்தசோகையை தவிர்க்க பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நட்ஸ், டோஃபு மற்றும் ப்ராக்கோலியில் வைட்டமின் ஈ அளவுக்கு அதிகம் இருப்பதால், இதனை வாரம் ஒரு முறை பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், வயதாவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.