அரசு மருத்துவமனைகளுக்கு, 1,737 சிறப்பு பிரிவு டாக்டர்கள் இடங்களை நிரப்பமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., நேரடி ஆட்தேர்வு நடத்தியும் டாக்டர்கள் ஆர்வம் காட்டவில்லை.
போதிய ஆட்கள் கிடைக்காததால் 433 பேரை மட்டுமே தேர்வு செய்ததாக வாரியம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஓரளவு இருந்தாலும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உயர் மருத்துவம் படித்த (எம்.எஸ்., - எம்.டி.,) சிறப்பு டாக்டர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, '1,737 சிறப்பு டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, அரசு அறிவித்தது.
தேர்வு நடத்தாமல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 'வாக் இன் இன்டர்வியூ' முறையில், ஆட்தேர்வு நடந்தது. அரசு பணியில் சேர சிறப்பு டாக்டர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. நீண்ட காலம் ஆட்தேர்வு நடத்தியும் 25 சதவீத டாக்டர்கள் கூட கிடைக்கவில்லை. தேர்வான டாக்டர்கள் பட்டியலை எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சை, மகளிர் நோய் பிரிவில் - 73; பொது அறுவை சிகிச்சை - 46; குழந்தைகள் சிகிச்சை - 43 பேர்; முடநீக்கியல் பிரிவில் - 27 பேர் உட்பட, மொத்தம், 433 பேர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளுக்கு ஒருவர் கூட வரவில்லை. எம்.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறப்பு பிரிவு டாக்டர் இடங்களை நிரப்ப போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. அரசுப் பணியில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. வந்தவரை தேர்வு செய்தோம்' என்றார்.
இப்படி சிக்கலான நிலையில் அரசு எப்படி மற்ற இடங்களை நிரப்பப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகண்டிப்பாக இவர்கள் அரசின் சலுகைகளை பெற்றுதான் வந்திருப்பார்கள். அப்படி இருக்கும்போது மக்களுக்கு சேவை செய்யாமல் நினைப்பது வருந்ததக்கது. இவர்களை 60 வயது வரை அதாவது இளைப்பாறும் வயது என்று அரசு வைத்த வயதுவரை தனியாக மருத்துவ தொழில் செய்யாமல் முடக்கவேண்டும். 60 வயதுக்கு பின் (அதாவது அரசின் ரெடையர்மென்ட்) மருத்துவ தொழில் செய்ய அனுமதிக்கலாம். அதை ஏன் அரசு செய்ய முடியாததா!!!
ReplyDeleteமக்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள்