Pages

Friday, January 2, 2015

வங்கி சேமிப்புத் திட்டங்களில் கோரப்படாமல் இருக்கும் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது எப்படி?


சேமிப்புக் கணக்கு, ஆர்.டி., மற்றும் பிக்சட் டிபாசிட் என, பல திட்டங்களின் கீழ், வங்கியில் சேமிப்பை பல்வேறு சூழ்நிலைகளில் முதலீட்டாளர்கள் துவக்கி இருப்பர்.அதன்பின், அதை மறந்திருப்பர் அல்லது முதலீடு செய்தவர் இறந்திருக்கலாம். 


முதலீடு குறித்த தகவல்களை, யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தாலும், இப்படி நடக்க வாய்ப்புண்டு.இந்தப் பணத்தைத் திரும்ப பெற தேவையான ஆதாரமாக, பிக்சட் டிபாசிட் பத்திரம் அல்லது எண், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் அல்லது கணக்கு எண், ஆர்.டி., பாஸ்புக் அல்லது ஆர்.டி., எண், எந்த ஆண்டில் முதலீடு செய்திருக்கிறார் என்ற விவரம் தெரிந்திருந்தால், அதையும் குறிப்பிடலாம்.மேற்கூறிய, எந்த ஆதாரமும் இல்லை; முதலீடு செய்திருக்கும் தகவல் மட்டும் தெரியும் எனில், எந்த வங்கி யில் கணக்கு வைத்திருந்தாரோ, அந்த வங்கியின் இணைய தளத்தில் கோரப்படாத, முதலீட்டாளரின் விவரம் இருக்கும். இதில், முதலீட்டாளரின் பெயரை மட்டும் கொடுத்து, தகவலை பெறலாம்.கணக்கு வைத்து இருக்கும் கிளையில் மட்டும் தான், எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார், அதன் இன்றைய நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதை நேரில், கடிதம், மெயில் மூலமாக, 'கிளைம்' செய்யலாம்.

முதலீட்டை திரும்பப் பெற, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாக, தற்போதைய முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, இதுநாள் வரை கிளைம் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தை விளக்கும் கடிதம், முதலீடு செய்த ஆதாரத்தின் நகல் அல்லது ஒரிஜினல். இவை இல்லை எனில், அதற்கான காரணத்தைக் கடிதமாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.முதலீட்டாளர் இறந்துவிட்டால், அந்தத் தொகையை வாரிசுகள் பெறலாம். இதற்கு, வாரிசுச் சான்றிதழ், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும் போது, அதில் முதலீட்டை யார் திரும்பப் பெறலாம் என்பதற்கான கடிதத்தில், மற்ற வாரிசுகள் கையொப்பம் இடுவது அவசியம். பணத்தை பெறுபவரின், தற்போதைய முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முதலீட்டுக்கான ஆதாரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.