Pages

Friday, January 2, 2015

ஜனவரி 19, 20ம் தேதிகளில் தொழில் சார்நிலை உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்காணல்

தமிழ்நாடு தொழில் சார்நிலை உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்காணல், வரும் 19, 20ம் தேதிகளில் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணியில், உதவிப் பொறியாளர் (தொழில்கள்) பதவிக்கு, 40 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான கணினி வழி எழுத்து தேர்வு, ஜூன் 19ல் நடந்தது.

இதில், 4,279 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி உள்ளிட்ட, அறிவிக்கப்பட்ட பல்வேறு விதிளின் படி, 200 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 82 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதுபற்றிய விவரங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான நேர்காணல், ஜன., 19, 20ம் தேதிகளில், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். இவ்வாறு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.