Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 30, 2014

    பட்டப் படிப்புகளின் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியீடு!!

    தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.  வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்.

    படித்து பட்டம் பெற்றாலும் திறமையும், தகுதியும் தேவை!

    வேலைவாய்ப்பு தேடி காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, தமிழகம் மட்டும் அல்ல; நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது. தாங்கள் படித்த கல்விக்கு ஏற்ப, வருமான அளவை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.

    நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி?

    செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை. அப்போதும் எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப் பாரத்துக்கொள்வோம். அது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களா? இதோ...

    தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விடுப்பில் செல்லும் போது பொறுப்பினை வழங்கல் குறித்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

    கல்வித்துறை அலட்சியத்தால் பள்ளிகளில் நீக்கப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்!

    தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. துவக்கத்தில், ஆறு பிரிவுகளில் 66 உட்பிரிவுகளை கொண்டிருந்த தொழிற்கல்வி, தற்போது 12 உட்பிரிவுகளாக குறைந்துள்ளது.

    நிறுத்தி வைக்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம் - மீண்டும் தொடங்கப்படுமா?

    எந்தவித அறிவிப்புமின்றி, மாணவர்களின் அறிவை வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம், பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் கலைச் சொற்கள், கோட்பாடுகள், அறிஞர்களது கண்டுபிடிப்புகள் குறித்து, தமிழ் மொழியில், எளிய சொற்களின் பயன்பாட்டில் அறிவதற்காக, அறிவியல் தமிழ் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இது, கடந்த இரு ஆண்டுகளாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    ANNAMALAI UNIVERSITY RESULTS

    செப்டம்பர் 30ம் தேதி எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். காலி இடங்களுக்கான கலந்தாய்வு

    தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு இரண்டு கட்டமாக கலந்தாய்வு முடிந்து, இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில் ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.

    பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்!

    மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமை சூழலை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

    இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    Monday, September 29, 2014

    பள்ளிக்கல்வித்துறை - விருதுநகர் மாவட்டம் - 2014-15 - பத்தாம் வகுப்பு அறிவியல் 1 மதிப்பெண் வினாக்களுக்கான சிறப்புக் கையேடு

    பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் வழங்கப்படாமைக்கான விவரத்தை அளிக்க இயக்குனர் உத்தரவு

    7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை

    Weight Loss Successஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை.
    ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
    நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

    மேதகு தமிழக ஆளுநர் முனைவர் கே.ரோசய்யா அவர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சராகப் பதவிபிரமாணமும் செய்து வைத்தார்கள்


    தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!

    ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை 

    நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. 

    ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். 

    எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை. 

    தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

    இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் அரசு நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு

    அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிக்கப்படு கிறார்கள். அதேநேரத்தில், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் நேரடி நியமன வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

    தேர்வுக் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் உயர்த்திய தேர்வுக் கட்டண உயர்வை, வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இப்போது, காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வருகிறது.

    Manomaniam Sundaranar University DD&CE Results

    1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம்

    ராஜாஜி 10-04-1952 முதல் 13-04-1954 வரை
    கே.காமராஜ் 13-04-1954 முதல் 02-10-1963 வரை
    எம்.பக்தவச்சலம் 02-10-1963 முதல் 06-03-1967 வரை
    அண்ணா 06-03-1967 முதல் 03-02-1969 வரை
    மு.கருணாநிதி 10-02-1969 முதல் 04-01-1971 வரை
    15-03-1971 முதல் 31-01-1976 வரை

    ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் 2032 பணியிடங்கள் விரைவில் வர உள்ளது?

    ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது அதில் வெயிட்டேஜ் அடைப்படையில் 12000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    4 மாதமாக தலைமை ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகள்

    பூந்தமல்லியில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை 3,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய பள்ளியாக திகழும் இங்கு, கடந்த மே மாதம் முதல் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. இந்த பள்ளியின் அருகில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 10ம் வகுப்பு வரை 700 மாணவிகள் படிக்கின்றனர்.

    அக்.6ல் பக்ரீத்: அரசு காஜி அறிவிப்பு

    Govt Nod Made Mandatory for All Other Board Schools

    SSA Gears up for Cleanliness Drive

    உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி

    இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், கம்பனி என்று தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.

    DEPARTMENTAL EXAM-2014 DECEMBER-ONLINE APPLY

    S No.Advt. No./ Date of NotificationNotificationOnline RegistrationDate of ExaminationActivity

    FromTo
    1

    01.09.2014
    Deptl.Exam Dec'2014
    01.09.201430.09.2014
    23.12.2014
     to
    31.12.2014
    Apply Online

    Sunday, September 28, 2014

    தமிழகத்தில் ஆட்சியமைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு

    தமிழகத்தில் ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் ரோசையா அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதம் ஆளுநர் ரோசையாவிடம் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    நாளை முதல் நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும்

    இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு. இரவிசந்திரனிடம் கேட்ட பொழுது, அவர் ஆசிரியர் பயிற்சி இயக்குனரிடம் வினவிய பொழுது பயிற்சியில் நடைபெறுவதில் எவ்வித மாற்றமில்லை என்று தெரிவித்தாக தெரிவித்தார். இதையடுத்து புதிதாக பணி நியமனம் செய்யபட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நாளை முதல் பாடவாரியாக நடைபெறவுள்ளது. தற்பொழுதய அசாதாரண சூழ்நிலையை கருத்த்ல் கொண்டு இந்த தள்ளிபோகுமோ என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சி கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகளுடன் சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்கிறார். 

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - தகவல்கள்

    சென்னையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் நடத்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.

    ஜாமீன் கோரி நாளை மனு தாக்கல் செய்கிறார் ஜெயலலிதா

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் அவர் தானாகவே இழந்து விட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதகாரன் உள்ளிட்ட நான்கு பேரும் பெங்களூர் பரப்பன அஹ்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 

    சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதியில்லை

    சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. பின்னர் ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.பதவியையும் இழந்து விட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. 

    தமிழக அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்., ? இன்று மாலையில் அ.தி.மு.க., முடிவு ?

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யும் விதமாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இன்று சென்னையில் மாலை கூடி ஆலோசிக்கவுள்ளதாக அ.தி.மு.க., வட்டாரம் தெரிவிக்கிறது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்படுவார் என அ.தி.மு.க,வின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

    ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை: தீர்ப்புக்கு ராம்ஜெத்மலானி எதிர்ப்பு

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையோடு 100 கோடி ரூபாய் அபாரதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

    தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் உப்பட பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மாணவர்களை குழப்பும் கல்வித்துறை

    பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் பட்டியலில் இடம் பெற வேண்டிய நாட்டின் பெயரை விட்டுவிட்டு, இல்லாத நாட்டின் பெயரைச் சேர்த்து, கல்வித் துறை குழப்பம் செய்துள்ளது. மேலும், ஒரு உறுப்பு நாட்டின் பெயரை சேர்க்கவும், கல்வித் துறை மறந்து உள்ளது.

    Joy of Giving week postponed Oct 2nd week

    நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு

    மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் ஆந்திர கல்வி குழுவினர் பாராட்டு

    'தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது' என ஆந்திர கல்வி குழுவினர் தெரிவித்தனர்.கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், கல்வி மேம்பாடு அடைந்த மாநிலங்களின் செயல்பாடுகளை அறிந்து வர, ஆந்திர அரசு திட்டமிட்டது. அதன் முதல் முயற்சியாக, ஆறு பேர் கொண்ட குழு, தமிழகத்தில் ஆய்வு செய்ய வந்துள்ளது.

    புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

    புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

    இனி வரப்போகும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்கான குறிப்புகள்

    1. முதலில் உங்கள் பாடதிட்டத்தை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அது கல்வி சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் இருக்கும்.

    2. அந்த பாடத்திட்டத்திற்கு ஏற்ற புத்தகங்களை வாங்குங்கள். நல்ல புத்தகங்கள் உங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் உள்ளன. அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    3. பாடத்திட்டம் 10 யூனிட்களை கொண்டு இருந்தால் அதற்கேற்ப நோட்டு புத்தங்களை வாங்கி கொள்ளுங்கள்.

    ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்

    தற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வு அளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தவறு என்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த 5% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் இந்த 5% மதிப்பெண் வழங்கக்கூடாது

    TRUST EXAM 12.10.2014 அன்று மாற்றப்பட்டுள்ளது

    இன்று நடைபெற இருந்த ஊரக திறனறிதேர்வு TRUST EXAM 12/10/2014 அன்று மாற்றப்பட்டுள்ளது.

    Saturday, September 27, 2014

    SSLC / PLUS-2 SEP 2014 QUARTERLY EXAMINATION ANSWER KEYS

    அடுத்த முதல்–மந்திரி யார்? 4 பேர் பெயர் அடிபடுகிறது - மாலை மலர்

    அடுத்த முதல்–மந்திரி யார்? 4 பேர் பெயர் அடிபடுகிறதுசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவர் முதல்– அமைச்சர் பதவியை இழந்துள்ளார். அவர் தலைமையிலான மந்திரிசபையும் பதவியில் இருந்து விலக உள்ளது.

    ஜெயலலிதா பதவி இழந்துள்ளதால் அடுத்து புதிய முதல்–மந்திரி தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் புதிய முதல்–மந்திரியாக யாரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நீதிபதியிடம் ஜெ., கோரிக்கை - தினமலர்

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட தீட்டப்பட்ட சதி இந்த வழக்கு என்றும், தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவு தண்டனை வழங்குமாறும் சிறப்பு கோர்ட் நீதிபதி ஜான்மைக்கேல்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து; பொதுச் செயலாளர்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பங்கேற்பாளர்களின் நலனை
    கருத்தில் கொண்டும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ரங்கராஜன் அறிவித்துள்ளார். 

    சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது

    தமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகளில் மட்டும் அமலில் இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம், அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

    தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்

    தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

    தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படும்?

    பிறை சரியாக தெரியாததால் அக்டோபர் 6 ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளதாக தெரிகிறது. ஆகவே அக்டோபர் 6 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவிக்கலாம் என எதிபார்க்கப் படுகிறது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சலுகை ரத்து: அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

    ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள,மதிப்பெண் சலுகை செல்லாது என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

    கலந்தாய்வில் குழப்பம்; இல்லாத பணியிடத்துக்கு ஆசிரியர் நியமனம்


    Friday, September 26, 2014

    2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது

    2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய  ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்; தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க  வழங்கப்பட்ட 5%  மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ரத்து செய்யபட்டது. அந்த தீர்ப்பில் தற்போது தேர்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள்(அரசு உதவி பெறும் பள்ளி) வேலைபார்க்கும் 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். அவர்களை நீக்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    ஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள் - தி இந்து

    தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) வழிகாட்டுதல் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued

    School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

    10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் குழப்பம்

    பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டிய நாட்டின் பெயரை விட்டுவிட்டு, இல்லாத நாட்டின் பெயரைச் சேர்த்து, கல்வித் துறை குழப்பம் செய்துள்ளது. மேலும், ஒரு உறுப்பு நாட்டின் பெயரை சேர்க்கவும், கல்வித் துறை மறந்து உள்ளது.

    ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த உத்தரவு

    ’மத்திய அரசின் ’தூய்மையான இந்தியா’ திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்கள் இன்று முதல் செயல்படுத்த வேண்டும்’ என அனைத்து பல்கலைகள், கல்லூரிகளுக்கு பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) அறிவுறுத்தி உள்ளது.

    இஸ்ரோவில் 2 சதவீதம் பேர் மட்டுமே ஐ.ஐ.டி., இன்ஜினியர்கள்!

    இஸ்ரோவில் பணிபுரிபவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே நாட்டின் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக கருதப்படும் ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,களில் பயின்ற இன்ஜினியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை; தமிழக அரசின் உத்தரவு ரத்து

    ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு 60க்கு பதில் 55 சதவீதமாக குறைத்து மதிப்பெண் சலுகை அளித்த தமிழக அரசின் உத்தரவை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

    மதுரை வக்கீல் கே.கே.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: ஆசிரியர்கள் நியமனத்திற்கு குறைந்தபட்ச தகுதி நிர்ணயித்து, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) 2010 ல் உத்தரவிட்டது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருவர் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற முடியும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை


    டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

    புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது.

    டிஇடி வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்தது ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு

    ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பணி நியமன கவுன்சலிங் நடந்தது. இதற்கிடையே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பட்டதாரிகள் சிலர் வழக்கு தொடர்ந்து தடை கேட்டனர்.

    12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர்

    பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) பணியில் சேருகின்றனர்.

    100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை; முதன்மை செயலாளர் சபிதா

    அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையை மாற்றி கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதரம், வணிகவியல் பாடங்களை சேர்த்து 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

    ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'

    அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.

    Thursday, September 25, 2014

    தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்த, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு

    பணி நியமன ஆணை பெற்றவுடன் நீங்கள் செய்ய வேண்டியது

    1. உங்கள் பணிநியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முதன்மை சிவில் சர்ஜன் அல்லது சிவில் சர்ஜனிடம் சென்று மெடிக்கல் பிட்னஸ் சர்டிஃபிகேட் வாங்குங்கள். அந்த சர்டிஃபிகேட்டை இரண்டு நகல்கள் எடுத்து வைக்கவும்.

    2. ஏற்கனவே பணியில் சேர்வதற்கான கடிதம் குரூப்பில் போட்டு இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஜாய்னிங் லெட்டர் தயார் செய்து
    கொள்ளுங்கள்.

    3. உங்கள் சர்டிபிகேட் அனைத்தையும் மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.

    ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து

    ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. 

    ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

    வெயிட்டேஜ் மதிப்பெண் வழக்கு : ஆசிரியர் பணியிடங்களில் 80-ஐ காலியாக வைக்க உத்தரவு

    இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இடத்தில் 80-ஐ காலியாக வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை விநியோகம்!

    இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக தேர்வானோருக்கு பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல் வழங்கப்படுகிறது.


    கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.

    மத்திய அரசு ஊழியர்களின் சம்மௌனம் சார்பில் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது மற்றும் 7வது ஊதியக் குழுவில் நடைமுறைபடுத்த வேண்டி முக்கிய கோரிக்கைகள்

    HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED BY THE NC/JCM STAFF SIDE TO 7TH CPC
    The Preliminary Discussion held between AIRF/JCM on 28-05-2014, JCM NC has submitted Interim Memorandum  on interim relief and Merger of DA.

    1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.

    2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.

    3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension and Family Pension Scheme.

    ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்

    ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணைகள் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள தமிழக அரசு

    ஆசிரியர்களுக்கான இடமாற்றல் கொள்கைக்கு இறுதி வடிவம்

    ஆசிரியர்களுக்கான இடமாற்றல் கொள்கைக்கு, இறுதி வடிவம் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும், 710 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 251 ஆரம்பப் பள்ளிகள், 52 நடுநிலை, 73 உயர்நிலை, 56 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட, 433 அரசு பள்ளிகளும் அடங்கும்.

    அனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம்

    ’வரலாறு, புவியியல் பாடங்களை, பள்ளிக் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வகுப்பறையிலும், சுவர் வரைபடங்கள் (வால் மேப்) கட்டாயம் தொங்கவிடப்பட வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    2018ல் இரண்டாவது மங்கள்யான் செயற்கைக்கோள்

    செவ்வாய் கிரகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டாவது செயற்கை கோளினை 2018-ல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ‘மங்கள்யான்’ செயற்கைக்கோள்: இந்திய விஞ்ஞானிகளின் மாபெரும் சாதனை

    ’மங்கள்யான்’ செயற்கைக்கோள் திட்டமிட்டபடி, அதன் சுற்றுவட்ட பாதையில் நுழைந்து விட்டது. இது, இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்த மாபெரும் வரலாற்று சாதனை. இந்த பயணத்தை, இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வெற்றிகரமாக, 14 விஞ்ஞானிகள் கொண்ட முக்கிய குழுவுடன், குறிப்பிட்ட காலத்திட்டப்படி வெற்றியாக்கியது பாராட்டத்தக்கது. இந்த ஆய்வில் துறைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி எஸ்.கே.சிவகுமார் கூறுகையில், ’ஆரம்பம் முதல் எவ்வித குளறுபடியும் இன்றி கட்டளைப்படி செயல்பட்ட விதம் பெருமை தருகிறது. நம் குழந்தை வெற்றியுடன் விண்ணில் பயணிக்கிறது’ என்றிருக்கிறார்.

    புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

    2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி   நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு
    பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் கீழ்க்கண்ட மையங்களில் பாட வாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது.

    இடைநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

    IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION I.A.Nos.3-4/2014 IN CIVIL APPEAL Nos.9204-9205 OF 2014 (Arising out of S.L.P.(Civil) No.3860-3861/2014) The State of Tamil Nadu Rep.by its .. Appellant(s) Secretary & Ors. Versus T.S. Anbarasu & Ors. .

    அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்கள் பணி நியமனம் ரத்து

    அமைச்சர், எம்எல்ஏ-க்களின் பரிந்துரை மீதான 6 பள்ளிக் காவலர்கள் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு பள்ளிக் காவலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார்.

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர்

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணி நியமனத்துக்கு தடை ,இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

    வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம்

    வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிலிண்டு மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி:

    Wednesday, September 24, 2014

    அரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 - 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகலின் பட்டியல்

    100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு

    100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
    *அரியலூரில் 3,
    *கோவையில் 2, 
    *கடலூரில் 2, 
    *தருமபுரியில் 3, 
    *திண்டுக்கல்லில் 2,
    *வேலூர் மாவட்டத்தில் 1, 
    விழுப்புரம் மாவட்டத்தில் 8,

    அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.

    பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை

    சிவகங்கை அரசு கல்லூரியில் கல்வி பாதிக்காத வகையில் மாறுதலாகிச் சென்ற பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தோல்வியை தோல்வியடையச் செய்து வெற்றிபெற வேண்டும்: அப்துல்கலாம்

    விடாமுயற்சியுடன் செயல்பட்டு, தோல்வியை தோல்வியடையச் செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், என, மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவுரை கூறினார். திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில், மாணவர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.

    அரசு பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம் - மாணவர்கள் அதிக ஆர்வம்

    கற்றல் முறையை நவீனப்படுத்தி, அனைத்து அரசு பள்ளிகளின் வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும் விதமாக, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி பயிற்சியின் வாயிலாக, ஆசிரியர் விடுப்பு எடுக்கும்போது கூட, வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை, தொழில்நுட்ப முயற்சிகள் வாயிலாக மேம்படுத்த, பள்ளிக் கல்வித்துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலை நாடுகளின் வகுப்புகளைபோல், அரசு பள்ளி வகுப்புகளிலும், மாற்றத்தை கொண்டுவர, கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, வகுப்பறை நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    5 ஆண்டுகளில் தமிழகத்தில் தற்கொலை செய்த மாணவர்கள் 2,449 பேர்!

    தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 83 ஆயிரத்து 103 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள் 2,449 பேர். ஆசிரியர்கள் மீது 30 புகார்கள் வந்துள்ளன என டி.ஜி.பி., மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    தனித்தேர்வுகளின் தேர்வு மையங்கள் அறிவிப்பு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாளை முதல் துவங்கும் எட்டு, பத்து, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தனித்தேர்வுகளின் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியர் நியமனம் சார்பான இடைக்கால உத்தரவு ரத்து; மதுரை உயர்நீதிமன்றம்

    ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012.

    உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில்  (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.

    தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள்களை விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை

    DEE - CPS - AIDED / PU / MUNICIPAL SCHOOL TEACHERS & NON-TEACHING STAFF - ISSUE OF ACCOUNT SLIPS FROM 2009-10 TO 2012-13 REG PROC CLICK HERE... 

    ஊராட்சிஒன்றிய / நிதியுதவி / நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S கணக்குத்தாள்கள் 2009-10 முதல் 2012-13 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூல அலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

    தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் ,அவர்கள் பணியேற்ற நாள் முதல் பணிக்காலம் கணக்கிட்டு தேர்வுநிலை,பெற்றுத்தர முயற்சி செய்து வருகிறது. தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதற்குமுன்னர் அவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தொகுப்பூதிய காலத்தினை தேர்வு நிலை வழங்க கணக்கில் கொள்ளுமாறு பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்.

    ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு

    ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -தசரா பண்டிகையை முன்னிட்டு 26-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலங்களில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    வாக்குச்சாவடி நிலைய அலுவலர் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்; தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மனு


    மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல்

    ''மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ராம் சேவக் சர்மா கூறினார்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது?

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்படுகிறது.

    உண்மை தன்மை அறியும் சான்றிதழ் வாங்க நீங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை.

    அனைத்தும் உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்து கொள்வார். நீங்கள் உங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் மூன்று நகல்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். இளநிலை, முதுநிலை மற்றும் பி.எட். , பட்டத்திற்கான உண்மை தன்மை அறியும் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

    மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு

    தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.இன்று ஆசிரியர் பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில்
    மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று வரிசை எண் 43வதுவழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

    செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது மங்கள்யான் விண்கலம், இந்திய மாபெரும் சாதனை: பிரதமர் பாராட்டு

     செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் புதன்கிழமை (செப்.24) காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தை ஒட்டிய சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.

    வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்

    வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

    Tuesday, September 23, 2014

    த.அ.உ.சட்டம் 2005 - எம்.ஏ., (பொருளியியல், வரலாறு, புவியியல், சமூகவியல், அரசியல் அறிவியல்) சார்பான உயர்க்கல்விக்கு ஊக்க ஊதியம் சார்ந்த துணை இயக்குனரின் பதில்கள்

    மதுரை நீதிமன்ற தடையாணை: மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

    மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

    டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு? உண்மையா?

    டெல்லி உச்சநீதிமன்றத்தில்  சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க வேண்டும் எனவும் வாதாடினார்.

    ஊதியம் - அரசாணை எண்.110ன் படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் ஆணை வழங்கி அரசு உத்தரவு

    மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு : சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை

    மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கக்கோரிய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு, சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை

    மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளின் பலநாள் கனவு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3 நாள் பணி இடைப்பயிற்சி

    சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மூன்று நாள் பணி இடைப்பயிற்சி நேற்று துவங்கியது. திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில், அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ், திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில், அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி இடைப்பயிற்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் நேற்று துவங்கியது.

    உச்சநீதிமன்றம் செல்லும் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்ப்பு போராட்டக் குழுவினர்

    வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    பள்ளிகளில் வழங்கப்படும் தொழிற்கல்வி பாடங்கள் - பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்

    மேல்நிலை வகுப்புகளில் தொழிற்கல்வி பிரிவில், பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றத்தை கொண்டு வராமலும், காலிப் பணியிடங்களை நிரப்பாமலும், பள்ளிக் கல்வித்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    காலாண்டு தேர்வு விடைத்தாள்களையும் பொதுத்தேர்வு பாணியில் மதிப்பீடு செய்ய உத்தரவு

    பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது: வழக்கமாக, காலாண்டுத் தேர்வு, பொதுத்தேர்வு பாணியில் நடக்கும். ஆனால், விடைத்தாள் திருத்தும் பணி, அந்தந்த பள்ளியிலேயே நடக்கும்.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 22.9.2014 அன்றைய தீர்ப்பு நகல்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்?

    தகுதிகாண் மதிப்பெண்ணுக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையில் பணியிட ஒதுக்கீடு பெற்றுள்ள 13ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

    தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது

    'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு சிக்கல் முதல்வர் தலையிட கோரிக்கை

    ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் செய்யப்பட்டும் பணி நியமன சிக்கலைத் தீர்க்க முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

    ஐகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு - தினகரன்

    வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஆசிரியர் பணி நியமனம் விவகாரம் முதல்வரின் வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை - தினகரன்

     பட்டதாரி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போயஸ்கார்டனில் முற்றுகையிட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனை வருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

    ஆசிரியர் பணியில் சேருவது சார்பான மாதிரி கடிதம்

    விடுநர்
    ................
    ...................
    .......................
    பெறுநர்
    தலைமை ஆசிரியர்,
    அரசு............ பள்ளி,
    ............
    பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
    மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு

    மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தில் குளறுபடி : 2011 - 12ல் எடுத்த கால் அளவிற்கு இந்த ஆண்டு வினியோகம்

    மாணவர்களுக்கு, வழங்கியுள்ள இலவச காலணிகள், பழைய அளவை வைத்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதால், அவை, மாணவர்களுக்குப் பொருந்தாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சீருடையில் ஆரம்பித்து, காலணி, புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, 'லேப்டாப்' மற்றும் மலைப்பிரதேச மாணவர்களுக்கு, கம்பளிச் சட்டை வரை, திட்டம் நீள்கிறது.

    கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் பயிற்சிப் பணிமனையில் கல்வித்துறை முதன்மை செயலர்

    கல்விசெயலர் திருமதி சபிதா அவர்களை SCERT இயக்குனர் வரவேற்று ,ECS ,Digital lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக் கூறி அமர, செயலர் அவர்கள் ஆசிரியர்களிடையே ஆசிரியர்களுக்காக உரையாற்றினார்….

    “பள்ளிக்கல்வி முதன்மைச் செயலரின் உரை மிக நேர்த்தியாக இருந்தது. ஆசிரியர்களை உற்சாகப்படுத்துவதாகவும், செயலில் இறங்கும் ஆற்றலைத் தருவதாகவும் இருந்தது.

    Monday, September 22, 2014

    பள்ளிக்கல்வி - அரசு / நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகலில் காலியாக உள்ள முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு

    ஆசிரியர் பணி நியமன தடை நீங்கியது

    ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    தகுதிதேர்வு எழுதவேண்டுமா? சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வரும் வழக்கின் விவரம்

    ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் பணத்தை ஒப்படைக்கிறார்களா???

    தமிழக அரசுப்பள்ளிகள் பற்றிய சிறுமியின் பேச்சு! கீர்த்திகாவின் கீர்த்தி

    ஆசிரியர் பணி நியமனம் - வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி


    சென்னை தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமிப்பதில், வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

    TET பணிநியமன தடை நீங்கியது


    TET பணிநியம தடை நீங்கியதுTET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்குதொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும் விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில் சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Sunday, September 21, 2014

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு


    பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளி!

    மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. 260 பேர் பயில்கின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால், பெரும்பாலும் விவசாய கூலிகள், தொழிலாளர்களின் குழந்தைகளே இங்கு படிக்கின்றனர்.

    முதல்வர் கொடுத்த தொகையில் கமிஷன் கேட்கின்றனர்: விடுதி காப்பாளர்கள் புலம்பல்

    முதல்வர் கொடுத்த தொகையில் கமிஷன் கேட்கின்றனர் என, ஆதிதிராவிட நலத்துறை விடுதி காப்பாளர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ், 1,304 ஆதி திராவிடர் நல விடுதிகள் உள்ளன. இவற்றில், 97,539 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

    முன் அனுமதியின்றி வெளிநாடுகளில் கிளை பரப்பினால்...: பல்கலைகளுக்கு யு.ஜி.சி. எச்சரிக்கை

    மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் பல்கலை மானிய குழுவின் ( யு.ஜி.சி.,) முன் அனுமதியின்றி, வெளிநாடுகளில், தங்கள் கல்வி நிறுவனம் தொடர்பான திட்டங்களை விரிவுபடுத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

    உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தொடர், முழுமையான மதிப்பீடு குறித்த சிறப்பு பயிற்சி

    காளையார் கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிவகங்கை மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு குறித்த சிறப்பு பயிற்சி நடந்தது.

    பொம்மலாட்டம்: கற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்


    புதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார்படுத்தி கொள்ளுங்கள்.

    1.STATE BANK OF INDIA வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.

    2.PAN Card க்கு apply செய்யுங்கள்.

    3.Service Record book வாங்குங்கள்.

    4.Medical Fitness Certificate வாங்குங்கள்.

    வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது,????

    நண்பர்களே திறமையான ஆசிரியர்கள் சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நமது தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமல்படுத்தியது. இதனை யாரும் மறுக்க முடியாது ஆனால் அதில் உள்ள சில குறைகளை நாம் அனைவரும் அறிந்ததே அதாவது அதிக பாதிப்பு குறைந்த பாதிப்பு என்று இருவகையாக பிரித்து பார்த்தால் தான் உண்மை தெரியும் அதாவது தேர்வு பெறாதவர்கள் அனைவரும் தேர்வு பெற்றவர்களை விட தகுதியில் குறைந்தவர்களா என்பதை சிந்திகக வேண்டும்.

    தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்

    தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் தலைவர் கு. திராவிடச்செல்வம் தலைமையில் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    "விடுமுறை நாள்களில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

    மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக விடுமுறை நாள்களிலும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என கல்வித் துறை அலுவலர்கள் வலியுறுத்துவதைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதித்தேர்வு செப்.21-ம் தேதி நடக்கிறது

    மத்திய அரசு பள்ளிகளில் ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது. மதுரையில் 4 மையங்களில் நடைபெறவுள்ள இத்தேர்வெழுத 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் ஆன்லைன் வழி சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை

    தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது. இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும்.

    நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு

    நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, டில்லியில் நடந்த, கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தில், முதல்கட்ட விவாதம் நடந்துள்ளது.

    Saturday, September 20, 2014

    இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள் !!

    • இந்தியாவின் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’
    • 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி அமைதி விருது
    • அமைதிக்கான மிக உயர்ந்த விருது – அசோக் சக்ரா விருது
    • மிக உயர்ந்த இலக்கிய விருது – பாரதீய ஞானபீட விருது
    • மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது – நேரு சமாதான விருது
    • மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது – பி.டி.கோயங்கா விருது
    • மிக உயர்ந்த பால்வள விருது – கோபால் ரத்னா விருது

    கடலில் 40 அடி ஆழத்தில் உள்ள ஹோட்டலில் தங்க 13 வருடமாக காத்திருக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்

    துபாய். பிஜி நாட்டில் உள்ள தனியார் தீவு ஒன்றில் கடலுக்கு அடியில் ஹோட்டல் கட்டுவதற்கான பணி 2001ல் தொடங்கப்பட்டது. 25 அறைகள் கொண்ட இந்த ஹோட்டல் கடலுக்கு அடியில் 40 அடி ஆழத்தில் சிறப்பு கண்ணாடி கூண்டுகளை கொண்டு அமைக்கப்பட இருக்கிறது. சிற்றுண்டி விடுதி, உடற்பயிற்சி கூடம், திருமணம்

    மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை

    மேல்நிலை தேர்வுகளை நடத்த மூவர் குழுவை நியமிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட செயற்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. செயலாளர் சிவகுமார் வரவேற்றார். பொருளாளர் முத்து துரை, மகளிர் ஆசிரியர் செயலாளர் சகாய அருள்செல்வி, மாவட்ட தனியார் பள்ளி செயலாளர் தியாகராஜன், மாவட்ட இணை செயலாளர் பாண்டிக்குமார் பேசினர்.

    மேல்நிலை தேர்வுகளை நடத்த மூவர் குழுவை நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

    மேல்நிலை தேர்வுகளை நடத்த மூவர் குழுவை நியமிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட செயற்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. செயலாளர் சிவகுமார் வரவேற்றார். பொருளாளர் முத்து துரை, மகளிர் ஆசிரியர் செயலாளர் சகாய அருள்செல்வி, மாவட்ட தனியார் பள்ளி செயலாளர் தியாகராஜன், மாவட்ட இணை செயலாளர் பாண்டிக்குமார் பேசினர்.

    பள்ளிகளில் புரியாத பாடங்களை அனிமேஷன் படங்கள் மூலம் புரியவைக்கும் முயற்சி!

    அல்ஜீப்ரா, அணு அமைப்பு மற்றும் இலக்கணம் உள்ளிட்ட பாடங்களை, மாணவர்களுக்கு புரியும்படி விளக்கும் வகையில், அனிமேஷன் படங்களை, தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கவுள்ளனர்.

    அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதி!

    இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத மருத்துவ கல்லுாரிகளுக்கு, மாணவர்களை சேர்க்க, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகி பெயர் பட்டியல்

    மாவட்ட தலைவர்: திரு.A .L .சலேத்ராஜா, அரசு மேல்நிலைப்பள்ளி, சாணார்பட்டி -திண்டுக்கல் மாவட்டம் -

    மாவட்ட செயலாளர்: திரு.ராம கிருஷ்ணன், அரசு மேல்நிலைப்பள்ளி, கோனூர் -திண்டுக்கல் மாவட்டம் 

    மாவட்ட பொருளாளர்: திரு.செல்வராஜ், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, வடமதுரை, திண்டுக்கல் மாவட்டம் 

    ஜம்பிங் வினாத்தாள் முறையை மீண்டும் கொண்டுவர தேர்வுத்துறை உத்தரவு

    கடந்த 2013ம் ஆண்டு வரை அறிமுகத்தில் இருந்த, ஜம்பிங் எனப்படும் இரு வினாத்தாள் முறையை, வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்த, மேல்நிலைக்கல்வி தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    அரசுத் துறைகளில் உள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 9-வது மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மாநிலத் துணைத் தலைவர் பி.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம்

    சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிக்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    புத்தகப் பையை உயிராக நினைத்த காஷ்மீர் சிறுவன் : உயிரைப் பணயம் வைத்து மீட்டுக் கொடுத்த மீட்பு படை

    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த நிலையில், தான் உயிராக நினைத்த புத்தகப் பையை தேசிய மீட்புப் படையின் உதவியுடன் மீட்டுள்ளான் பத்து வயது சிறுவன்.

    வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி? பொது நல வழக்கு போடுவது எப்படி?

    பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

    கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? சுப்ரீம் கோர்டில் வருகின்ற செவ்வாய் வரவுள்ளது

    கடந்த  ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில்  வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

    வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

    'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாஅண்டு உண்டா?

    ஆசிரியர் தகுதித் தேர்வை பல மாநிலங்கள் ஆண்டுக்கு இரு முறை நடத்துகிறார்கள். அதுதான் விதிமுறையும். ஆனால் தமிழ் நாடு மற்றும் சில மாநிலங்களில் தொடர்ந்து போடப்படும் வழக்குகள் மற்றும் முடிவே இல்லாத வழக்குகள் காரணமாக ஆண்டுக்கு இரண்டு தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    TNTET: வரும் திங்கள் தீர்ப்பு?

    COURT NO. 2 HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH TO BE HEARD ON MONDAY THE 22ND DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A--------------------------------------------------------------------------------------------I.
    The learned Advocates are informed that the matters once passed over would be called again before taking up final hearing cases in their respective categories. II. The learned Advocates are informed to file their affidavits and documents before the Registry with a due proof of service on the other side atleast three days prior to the date of hearing of the case. 
    --------------------FOR JUDGMENT ~~~~~~~~~~~~

    அரசு தொடக்க பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்; அமைச்சர்

    “அரசு தொடக்க பள்ளிகளில், அக்டோபர் இறுதியில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,” என்று கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் கூறினார். பெங்களூரு, குயின்ஸ் சாலை, காங்., அலுவலகத்துக்கு வந்த, அமைச்சர் கிம்மனே ரத்னாகர், கட்சியினரிடம் குறைகளை கேட்டார். பின், நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக பள்ளிகளில், 11,400 ஆசிரியர்களை நியமிக்க, நிதித்துறையிடமிருந்து, ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும்.

    Friday, September 19, 2014

    பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

    குறுவளமையப் பயிற்சி நாட்களுக்கு ஈடாக சிறப்பு விடுப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு CPS ஒப்புகைச் சீட்டு மற்றும் ஆசிரியர்களின் விடுப்பட்ட பதிவுகளை பணிப்பதிவேட்டில் சரிவர பராமரிக்க SSTA சார்பில் கோரிக்கை

    தமிழகத்தில் 11ஆண்டு காலம் வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க நமது இயக்க பொறுப்பாளர்கள் 10.09.2014 அன்று தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து நேரில் வலியுறுத்தினார் ,அதனை ஏற்ற இயக்குனர் ஐயா!!!அதற்கான உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கு வழிமுறைகளையும் தற்போது இந்த விபரங்கள் உள்ளன அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ள செய்தார் அங்கு நமது பொறுப்பாளர்கள் நேரில் சென்று தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட பணிகளை கேட்டறிந்து விரைவாக ஒப்புகை சீட்டு வழங்க கேட்டனர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி ௯றினர் .தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்தது கருவூலம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் அனைத்து ஆசிரியர்களும் வழங்கப்படும்.மேலும் அனைத்து ஆசிரியர்களும் பல் ஒன்றியங்களில் பணிப்பதிவேடுகள் பதிவுகள் சரிவர பராமரிப்பு செய்யவில்லை என்பதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களின் குறைகளை களைந்து உள்ளார் இதற்கு உதவிய பத்திரிகை,இணைய தளம் மற்றும் cps ஐ மாற்ற போராடும் நண்பர்களும் மாற்று இயக்கத்தினருக்கும் மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு SSTA வின் மனமார்ந்த நன்றி...

    வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தில் சேர பட்டதாரி இளைஞர்களுக்கு அழைப்பு

    வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தில் சேர, பட்டதாரி இளைஞர்களிடம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு ஐ.சி.டி., அகாடமி ஆகியவற்றின் சார்பில், பட்டதாரி இளைஞர்கள் 2,000 பேருக்கு, வங்கித் துறை, நிதியியல், சேவை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில், குறுகிய காலத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கல்லூரி மாணவர்கள் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கண்காணிப்பு

    கல்லுாரி மாணவர்கள் செல்லும் சில வழித்தட பேருந்துகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சென்னையில் கல்லுாரி மாணவர்கள் பேருந்தில் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், அப்பாவி பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் துறைக்கு, புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

    எந்த சூழ்நிலையிலும் ,பெண்கள் முன்னேற பெண்கல்வி அவசியம்

    தேவகோட்டை நகராட்சி சார்பாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் மாணவ, மாணவியர்க்கு இரும்பு சத்து மாத்திரை வழங்குதல்,பொது மருத்துவ முகாம் என இருபெறும்  நிகழ்ச்சியாக நடைபெற்றபோது   எந்த சூழ்நிலையிலும் ,பெண்கள் முன்னேற பெண்கல்வி அவசியம் என  நகராட்சி தலைவி சுமித்ரா ரவிக்குமார் பேசினார்.

    தமிழகப் பல்கலைகளில் இந்திக்கு இடமில்லை: முதல்வர் திட்டவட்டம்

    "இந்தி பேசாத மாநில மக்கள் மீது, இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும், இந்த அரசு உறுதியாக உள்ளது" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: இந்தி மொழியிலுள்ள UGC சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டுமென, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கோரியுள்ளனர்.

    தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் நியமனம் - 1987க்கு பிறகு குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ்2 என்பதற்கான அரசாணை

    இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகள் குறித்த விளக்கங்கள்

    மத்திய அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான 7% அகவிலைப்படி உயர்விற்கான ஆணை

    Payment of Dearness Allowance to Central Govt Employees - Revised Rate from 01.07.2014

    F. No. 1/212014-E.II (B)
    Government of India
    Ministry of Finance
    Department of Expenditure
    North Block, New Delhi
    Dated: 18th September, 2014.


    OFFICE MEMORANDUM

    Subject : Payment of Dearness Allowance to Central Government employees­ Revised Rates effective from 01.07.2014.

           The undersigned is directed to refer to this Ministry's Office Memorandum No. 1I112014-E.II(B) dated 27th March, 2014 on the subject mentioned above and to say that the President is pleased todecide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 100% to 107% with effect from I"July, 2014.


    2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry's O.M. No.  1(3)/2008-E.II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.