Pages

Tuesday, December 30, 2014

டிட்டோஜாக் (TETOJAC) உயர் மட்டக்கூட்டம் ஜனவரி-7 அன்று சென்னையில் கூடுகிறது; TNTF பொதுச்செயலர் செ.முத்துசாமி

டிட்டோஜாக் தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (TETOJAC)வின் உயர்மட்டக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 7 புதன்கிழமை சென்னையில் ஆசிரியர் மன்றம் பொதுச்செயலர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் சென்னையில் கூடுகிறது.
அப்போது இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் உயர்த்திட மறுத்த அரசின் கடிதம் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திரு. செ.முத்துசாமி தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளார். மேலும் இக்கூட்டத்திற்கு TATA, SSTA, TAM உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கலந்துகொள்ள வழிவகை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் டிட்டோஜாக் உயர்மட்டக்குழுவில் நமது சங்கம் சார்பான முன் வைக்கப்பட வேண்டிய கருத்துகள் குறித்து முக்கிய முடிவினை நாளை நாமக்கல் நகரில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் எடுக்கவேண்டி
உள்ளதால் இயக்க வட்டார, மாவட்ட செயலர்களும், மாநில பொறுப்பாளர்களும் தவறாது பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.