Pages

Monday, December 15, 2014

SSTA இந்த மாத இயக்குநர் சந்திப்பு நடைபெறவுள்ளது, இதுவரை CPS படிவம் வழங்காமலோ, பின்னேற்பு படிவம் பெறாமல் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம்!

இந்த மாதம் (டிசம்பர்) SSTA சார்பில் இயக்குனர் ,கல்வி துறை செயலாளர் சந்திப்பு நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் பொதுவான பிரச்சினைகள் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம் .இயக்குனர் சந்திப்பில் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான அரசாணையை விரைவாக வெளியிட வேண்டும், CPS பிரச்சினைகள் களைய கால அவகாசம் வேண்டும், பின்னேற்பு படிமம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பம் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படவுள்ளது.
இதுவரை தங்கள் ஒன்றியத்தில் CPS விண்ணப்பம் வழங்காமலோ அல்லது பின்னேற்பு படிவம் பெறப்படமாலோ இருப்பின் உடனடியாக இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவியுங்கள், இது தவிர பொதுவான பிரச்சினைகள் இருப்பினும் தெரிவிக்கலாம்!!! 
உங்களின் பேராதரவுடன் பல இன்னலுக்கு தீர்வு கண்டுள்ளது. ஆசிரியர்களுக்கான SSTA . மாநில பொது செயலாளர் திரு ;ராபர்ட் ,9843156296

1 comment:

  1. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் மாறுபட்ட மலைப்படியை குறித்து ஒரு கட்டுரை: ஒரு அரசு வழங்கும் படிகளை பொறுத்தவரை,அந்த அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஒரே மாதிரியாக தான் வழங்க வேண்டும்.ஆனால் மலைப்படிக்கு மட்டும் இடத்திற்கு இடம், ஒன்றியத்திற்கு ஒன்றியம்,மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுவது ஏன்? 1.தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500+90=ரூ.1590. 2. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் தொடக்க கல்வித் துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500+80=ரூ.1580. 3.தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்ககல்வித்துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி ரூ.1500=1500. தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்ககல்வித்துறை மலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் & பிற ஊழியர்களுக்கு வழங்கும் மலைப்படி விளக்கம்: 1. 31.05.200

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.