சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் சார்பாக பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக "முழு சுகாதார தமிழகம்" என்ற இயக்கத்தினை ஆரம்பித்து,அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களுடைய பள்ளி,இல்லம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் மற்றும் சுத்தமான உணவு,குடிநீர் ,சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் தன் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான ஓவிய ,பேச்சு ,கட்டுரை போன்ற போட்டிகளை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக
பள்ளி,வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்த திட்டமிடப்பட்டு முதலில் பள்ளி அளவில் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
பள்ளி அளவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.7ம் வகுப்பு மாணவி ராஜலெட்சுமி வரவேற்றார்.ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டியில் 2ம் வகுப்பு கிஷோர்குமார் "பல் துலக்கு பக்டீரீயாவை விளக்கு" என்கிற தலைப்பில் முதல் பரிசையும்,4 மற்றும் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் 4ம் வகுப்பு கார்த்திகேயன் முதல் பரிசையும் பெற்றனர்.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரை,ஓவியம் என்கிற மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்பிரிவில் ஓவிய போட்டியில் 8ம் வகுப்பு சொர்ணாம்பிகா "வெட்ட வெளி கழிப்பிடம் - வேண்டாநோயின் பிறப்பிடம் என்கிற தலைப்பில் முதல் பரிசையும்,கட்டுரை போட்டியில் 8ம் வகுப்பு மணிகண்டன் "சுத்தமான சுற்றுப்புறம் சுகமான வாழ்வைத் தரும் " என்கிற தலைப்பில் முதல் பரிசையும்,பேச்சுப் போட்டியில் 8ம் வகுப்பு நடராஜன் முதல் பரிசையும் பெற்றனர்.விழாவின் நிறைவாக 8ம் வகுப்பு சக்திவேல் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை வாசுகி,முத்துமீனாள்,வாசுகி செய்திருந்தனர் .இப்போட்டிகளில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் வரும் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நடை பெற உள்ள வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.