ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக பி.காம். படித்த நான், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன்.
ஆனால், என்னுடன் பணியில் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளர்கள் பலர் ரூ.20 ஆயிரம் சம்பளத்துடன் 2ம் நிலை கண்காணிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். எனவே, சம்பள முரண்பாட்டை போக்க அமைக்கப்பட்ட கமிட்டி முடிவை விரைவில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மனு குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.