Pages

Friday, December 26, 2014

தனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த வேண்டாம்: அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்

தனியார் இ-மெயில் சேவைகளை அலுவலகப் பணிகளுக்கு உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசுத் துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபலமான சில தனியார் இ-மெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள், ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்கள், அமைச்சர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்: உள்நாட்டு நிறுவனங்களின் இ-மெயில் சேவைகளையோ, தேசிய தகவல் மையம் சார்பில் உருவாக்கப்பட்ட இ-மெயில் சேவைகளையோ பயன்படுத்தும்போது, அதில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் சில முக்கியத் தகவல்கள் அழிந்துவிட்டாலும் கூட உள்நாட்டு சேவையில் அதை மீட்டெடுக்க முடியும். ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களின் இ-மெயில் சேவையில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.
அவை நமது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே அலுவலகப் பயன்பாடுகளுக்கு உள்நாட்டுச் சேவைகள் அல்லது தேசிய தகவல் மையம் சார்பில் உருவாக்கப்பட்ட இ-மெயில் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.