Pages

Monday, December 29, 2014

அண்ணாமலைப் பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீட்டுக் குழு, 'ஏ' கிரேடு வழங்கி உள்ளது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், நிதி நெருக்கடி மற்றும் நிதி முறைகேடு ஏற்பட்டதால், கடந்த, 2013 ஏப்ரல் மாதம், பல்கலை நிர்வாகத்தை, தன் கட்டுப்பாட்டிற்குள் அரசு கொண்டு வந்தது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம், தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு, அண்ணாமலைப் பல்கலையின் அனைத்து துறைகளையும் தர மதிப்பீடு செய்து, 'ஏ' கிரேடு வழங்கி உள்ளது. இது, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்பல்கலை, 860 ஏக்கர் நிலப்பரப்பில், 49 துறைகளுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.