மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் நிதியை செலவிடுவதில் அரசு தொடக்கப் பள்ளிகள் போதிய ஆர்வம் காட்டு வதில்லை என புகார் எழுந்துள்ளது. மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளிகளில் மரக்கன்று, மூலிகை செடி வளர்ப்பு, பசுமை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படுகின்றன.
மதுரையில் இந்தாண்டு 100 தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு தலா ரூ.2500 நிதி ஒதுக்கப்பட்டன. இந்நிதியை பயன்படுத்துவதில் அப்பள்ளிகள் ஆர்வம் காட்டுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற அதிகாரி ஒருவர் கூறுகையில் "உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் சம்பந்தப்பட்ட நிதியை பல மாதங்களுக்கு முன்பே பெற்றன. அப்பள்ளிகளில் தலா 100 முதல் 250 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஆனால் பல தொடக்கப் பள்ளிகள் நிதியை கூட பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. 15 நாட்களுக்கு முன்பு தான் சம்பந்தப்பட்ட அந்த பள்ளிகளை அழைத்து நிதியை வழங்கினோம்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.