திருநெல்வேலி சுடலைக்கண்ணு மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) விதிமுறைகளுக்கு மாறாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொலைக் கல்வியில் 2010 ல் பி.எட்., படிப்பில் 500 பேருக்கு பதிலாக 523 பேர், 2011ல் போதிய கல்வித் தகுதி இல்லாத 16 பேரை அனுமதித்தனர்.
அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். அடையாளம் தெரியாத சில ஊழியர்கள் மீது 2012 ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் வேண்டுமென்றே தாமதிக்கின்றனர்.
புகாருக்குள்ளானவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகின்றனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.மாலா, "விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.