Pages

Saturday, December 27, 2014

தேவை... ஒற்றுமையும்...வீரமும்...!

திருத்திக் கொள்ள வேண்டியவை :

1. ஆசிரியர்களை இனம் பிரிக்காதே... சாதிகளால் சிதறுண்ட சமுதாயம் போல் எதற்கும் பயன்படாமல் போய்விடும்...

2. நான் வேறு இயக்கம் அவன் வேறு இயக்கம்...அவனது செயல்பாடுகளுக்கு எனது ஆதரவு கிடையாது என்று பிரிந்து கிடந்ததாலேயே இன்று வரை நாம் வெல்ல முடியவில்லை...


3. சமீபகாலமாக தோன்றியுள்ள புதிய இயக்கங்களின் பெயர்களை பட்டியலிடுக...! அவை எதற்குத் தோற்றுவிக்கப்பட்டன என யாருக்காவது தெரியுமா?

4. தனிநபரை முன்னிறுத்துவது இயக்கமா? தொழிற்சங்க கொள்கைகளை பின்பற்றுவது இயக்கமா? சமீபகாலமாக ஒரு சிலர் ஆசிரிய சமுதாயத்திலேயே இடைநிலை ஆசிரியர் அதிலும் குறிப்பாக 2800 பெறுபவர்கள் ...பிற ஆசிரியர்கள் என்று பிளவை ஏற்படுத்தி அதில் குளிர்காய்ந்து கொண்டுள்ளார்கள்...

இயக்கங்களும் அவற்றின் செயல்பாடுகளும் அளப்பற்கரியது...
ஒரு சில நிகழ்வுகளில் பெற்று விட்ட தீர்ப்புகள் மட்டுமே எல்லாவற்றிறகும் தீர்வாகி விடாது... இது போன்ற நிகழ்வுகளில் சற்றே பிறழ்ந்தாலும் அது இமாயலத் தோல்விக்கு வித்திட்டு நிரந்தரமாக முடக்கி விடும் அபாயத்தை சிலர் அறிந்திருக்கவில்லை.

நீதிமன்ற முறையீடு என்பது ஒருவழிப்பாதை....அதன் கதவு மூடிவிட்டால் பின் நீதிமன்றமே நினைத்தால் கூட அதனை எளிதில் திறக்க இயலாது...

ஆனால் நேரிடையான கோரிக்கைகளும்...பேச்சுவார்த்தைகளும்..போராட்டங்களும் உரிமைகளை வென்றெடுக்கும் வரை யாராலும் தடுக்க முடியாதது...ஒருமுறை தோற்றால்...மறுமுறை...இன்னொரு முறை...பேசு...நிர்பந்தி...போராடு..போராடு...வெற்றிபெறும் வரை போராடு...இது தான் தொழிற்சங்க நியதி...வெற்றியின் தாரக மந்திரம்....

6 வது ஊதியக்குழுவில் பாதிப்பு இல்லாத ஆசிரியர் பிரிவு ஏதாவது உண்டா? மிகக் கடுமையான பாதிப்புகளை அடைந்தோர் உண்டு...

 ஒரு சிலர் 5400 பெற்று விட்டார்கள் என்று குத்திக் காட்டுவது மேன்மையல்ல...அந்த 5400 ம் அதன் பின் யாரும் பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியுமா? அதனை அனைவரும் பெற வேண்டும் என நினைப்பது தான் தொழிற்சங்கம்...ஒருவருக்கு ஒன்று கிடைத்து விட்டது என பொறாமைப்படுவதோ அல்லது அதனை தடுத்து நிறுத்துவதோ தொழிற்சங்கக் குணம் அல்ல...

அப்படி ஒருவருக்கு கிடைத்தது அனைவருக்கும் எந்த பாகுபாடுமில்லாமல் சென்றடைய வேண்டும் என்று போராடுவதும் குரல் கொடுப்பதும் தான் தொழிற்சங்கங்கள்...
நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பது சாதாரண குப்பனோ சுப்பனோ அல்ல.. அரசாங்கம்...
ஊதினால் நகர்ந்து கொடுக்க அது காற்றடித்த பலூன் அல்ல...கோடி கைகள் இணைந்தாலே கோரிக்கைகள் வெல்லும் நிலை...

ஒரே கோரிக்கை...பல்வேறு கோரிக்கைகள் என்பதெல்லாம் இங்கு பிரச்னையே அல்ல...அதனை கோருபவர்கள் கோரிக்கைகளின் எண்ணிக்கைகளை விட அதிகமாக பிளவுபட்டு உரிமைகளை வென்றெடுப்பதை விட அதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் வீரர்களை முதுகில் குத்துவதிலேயே குறியாய் அலையும் போது எங்கிருந்து வெல்ல முடியும்?

ஆசிரிய சமுதாயத்தில் ஒரு சிலர் அதீத வெறுப்புணர்வுடன் தான் ஓர் ஆசிரியர் என்ற நிலையைத் தாண்டி வெறுப்பையும்...கோபத்தையும்...பொறாமையையும்...இயலாமையையும் புடம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்...அவர்களை அடையாளம் கண்டு புறந்தள்ளினால் மட்டுமே நாம் நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
எப்போதோ வென்றிருக்க வேண்டிய உரிமைகளை இன்னும் தொட்டுக்கூட பார்க்க முடியாத நிலை ஏன் வந்தது? சிந்தித்துப் பாருங்கள்....

இன்றைய இடைநிலை ஆசிரியர் நாளை தேர்வுநிலை ஆசிரியர்...தலைமை ஆசிரியர்...பட்டதாரி ஆசிரியர்...உதவி தொடக்கக்கல்வி அலுவலர்....
அனைவரும் ஒன்றுபட வேண்டும்... தீய சக்திகளின் பிரிவினைவாத குரல்களுக்கு பலியானால் இறுதிப்பலி நாமாய் தான் இருக்கும்...
கொள்கைகளால் இணையுங்கள்... கோரிக்கைகளை வெல்லுங்கள்...
ஒன்றுபடுவோம்...போராடுவோம்...வெற்றி பெறுவோம்...
Annadurai Velusamy

1 comment:

  1. once,NETAJI told to the people,'lack of unity is our real enemy'....after 6th pay commision,entirely SG teachers suffered monetary loss.I appreciate your thoughts..

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.