Pages

Friday, December 19, 2014

மூன்றாவது முறையாக தொடக்கக் கல்வித்துறையில் மீண்டும் ஒரு பதவி உயர்வு வாய்ப்பு?

புதியதாக தொடங்கப்பட்டுள்ள 128 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் 42 நடுநிலைப்பள்ளிகளில் 42 தலைமையாசிரியர்கள், 126 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், அலகு விட்டு அலகு மாறுதலில் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கும் மீண்டும் ஒரு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கூடாது என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கினங்க பதவி உயர்வு ஒரே சமயத்தில் வழங்க இயலுமா என இயக்குநர் அவர்கள் கேட்டார்கள்.
அவ்வாறு நடந்தால் தமிழக அரசுக்கும் நமது துறைக்கும் பலரின் பாராட்டுகள் கிடைக்க வாய்ப்புண்டு. தாங்கள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரை கலந்து கொண்டு ஒரு தேதியை அறிவிக்க வேண்டும் என நேற்று தொலைப்பேசியில் கேட்டுக்கொண்டார்.
உறுதியாக வாய்பினை ஏற்படுத்தித் தருவதாக இயக்குநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.

3 comments:

  1. ஒவ்வொரு மாதமும் பதவி உயர்வும்,மாறுதலும் வழங்குங்கள் .அதனைப் பயன்படுத்தி 4-7லட்சங்கள் புரளட்டும் !

    ReplyDelete
  2. ஒவ்வொரு மாதமும் பதவி உயர்வும்,மாறுதலும் வழங்குங்கள் .அதனைப் பயன்படுத்தி 4-7லட்சங்கள் புரளட்டும் !

    ReplyDelete
  3. ஆசிரியர்களின் நடைமுறை தேவைகளை அறிந்து கல்வித்துறையை வலியுறுத்தும்

    ஐபெட்டோ அவர்களையும்

    தமிழக ஆசிரியர் கூட்டணி செயல்பாடுகளையும்

    மாநில பொறுப்பாளர்களையும்

    பாராட்ட வேண்டும்

    M. GOPAL, TEACHER, DINDIGUL
    9486229370

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.