Pages

Wednesday, December 24, 2014

டி.டி.இடி தேர்வு மதிப்பெண் சான்று வினியோகம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம்ஆண்டுக்கான மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள்வினியோகம் செய்யப்படும். 

மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை எந்த மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கொடுத்தார்களோ அங்கேயே மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.மேற்கண்ட தேர்வுக்கு விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் 30ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்துக்குரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்.மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை நேரிலேயே செலுத்தலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.