மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை, செயலாற்றல் இவற்றின்மூலம் தமிழகத்தில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் மிகுந்த வளர்ச்சியடைந்து, மாணவ மாணவியரின் அறிவுத்திறன் பெருகியுள்ளதாகவும், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில், நேற்று பேசிய சிதம்பரம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. மா. சந்திரகாசி, ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 1998-ம் ஆண்டில் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்கியதாகத் தெரிவித்தார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து, சத்தியமங்கலம் வரை நடைபெற்றுவரும் அகல ரயில்பாதை அமைப்புத் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் C. கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, உயர்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ளார் என்றும், இதனைப் பின்பற்றி நாடு முழுவதும் உயர்கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் அரக்கோணம் தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு.திருத்தணி கோ. அரி, மக்களவையில் வலியுறுத்தினார். முன்னதாக, நாடாளுமன்றம் கூடியதும், பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இரு அவைகளிலும், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.