சென்னை ஆசிரியர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி கணினியில் பட்டதாரியாக இருப்பதுடன் கல்வியியல் பட்டதாரி தகுதியையும் பதிவு செய்திருக்க வேண்டும் . 1.7.2014 தேதியில் உச்ச வயது வரம்பு 57க்குள் இருக்க வேண்டும். இப்பதவிக்கு எந்த தேதி வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும்,சிவகங்கை மாவட்டத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலும் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வித்தகுதி, வயது, பதிவுமூப்பிற்குட்பட்டு தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை <உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், விடுபட்டிருந்தால் நாளைக்குள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.