பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:
அனைத்து விதமான பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் முழுக்கால் சட்டை (பேண்ட்) அணிய வேண்டும்.
மேலும், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது உறுதிச் சான்றிதழையும் பள்ளித் தலைமையாசிரியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.