இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ் குமார்நகர் மற்றும் ஊர் அமைப்பு திட்டத் துறை இயக்குநராகபணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவுதுறை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த பழனிச்சாமி, திருச்சி மாவட்டஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தவெங்கடாச்சலம் தேனி மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிஹரன்திண்டுக்கல் ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராகஇருந்த ராஜாராமன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த முனுசாமி சிவகங்கைமாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புதியஆட்சியராக எஸ் பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றுகூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.