பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் ஆதிகேசவன் (வயது-12). இவர், எசனையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால், ஆதிகேசவன் வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சனிக்கிழமை சென்றிருந்தார்.
அப்போது, ஆதிகேசவன் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததாகத் தெரிகிறது. இதில், ஆதிகேசவனின் கையில் பலத்த காயமும், முகத்தில் லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து, பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.