Pages

Tuesday, December 23, 2014

அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல் பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்பினருக்கும் இன்றுடன் தேர்வுகள் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.
விடுமுறைக்குப் பின்னர் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பல தனியார் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் ஜனவரி 5ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளன. அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் 3ம் பருவத்திற்குரிய பாட புத்தகங்கள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

1 comment:

  1. சிறுபான்மை பள்ளி களுக்கு
    வெள்ளி சனி விடுமுறை. 02/01/15 வெள்ளி. 03/01/15 சனி. அன்று மீலாடி நபி யும் கூட.
    அவர்களுக்கு என்று பள்ளி திறப்பு ?
    இவர்களுக்கு ஏதாவது அறிவிப்பு உள்ளதா?
    தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு மேல் விடுமுறை அளிக்கக் கூடாது என ஏதும் ஆணை உள்ளதா ?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.