இந்திய ராணுவத்தின், மிக முக்கிய அங்கமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.,), 2,776 விஞ்ஞானி பணியிடங்கள் காலியாக உள்ளதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்தார்.
பாதுகாப்பு தேவைகளை கருதி, உத்திகளை ஏற்படுத்தி, சிக்கல்களுக்கு தீர்வு கண்டு திட்டங்களை நிறைவேற்ற, அனுபவம் வாய்ந்த, அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானி கள் போதிய அளவில் இல்லை. இதே நிலை, கடந்த 2001ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது.
மேற்கண்ட பணியிடங்களை நிரப்பிக்கொள்ள, அனுமதி கிடைத்த பின், ஐந்து கட்டங்களாக தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தில், 555 விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு பாரிக்கர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.