தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஜீவானந்தம் (வயது18). அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 வாரங்களுக்கு முன் தேர்வு நடைபெற்றதையொட்டி ஆசிரியர்கள், வகுப்பறையில் மேஜைகளை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் வெளியே நின்றிருந்த மாணவன் ஜீவானந்தம் மற்றும் வேறு சில மாணவர்கள் வாய்த் தகராறு செய்து சண்டையிட்டனர்.
இதனால் அவர்களை வரவழைத்து தலைமை ஆசிரியை ஏசுவின்பவி கண்டித்தார். இதனால் ஜீவானந்தம் மனமுடைந்தான். அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றதும் ஜீவானந்தம் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டான்.
அலறிதுடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிய அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக பின்னர் அவன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜீவானந்தம் நேற்று இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து தேனி அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.