Pages

Sunday, November 16, 2014

TNPSC போட்டி தேர்வு மூலம் கல்வித்துறையில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்வாகி, கல்வித் துறையில் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வான 1,500க்கும் மேற்பட்டோர் 2013 மே மாதம் கல்வித்துறையின் கீழ் பல்வேறு ஊர்களில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தனர்.

இவர்கள் இரண்டு ஆண்டு தகுதி காண் பருவம் முடிவதற்குள் பதவி உயர்வுக்கான 45 நாள் சிறப்பு பயிற்சி, பவானி சாகர் அரசு பயிற்சி மையத்தில் முடிக்கவேண்டும். இந்த பயிற்சி முடித்திருந்தால் மட்டுமே பதவி உயர்வு பெறலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இப் பயிற்சிக்கு அனுப்ப கல்வித்துறை கால தாமதம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் உள்ளதாகவும் கல்வித்துறை ஊழியர்கள் புலம்புகின்றனர்.
பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:
தகுதிகாண் பருவத்திற்கு பதவி உயர்விற்கான பயிற்சி முடிக்கவேண்டும். இதற்கு கால வரைமுறை எதுவுமில்லை. எங்களுக்கு பின்பு பிற அரசு துறைகளில் பணியில் சேர்ந்தவர்கள் சிறப்பு பயிற்சி முடித்து, பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கல்வித்துறையில் மட்டுமே இந்த நிலை உள்ளது. சில அரசு பள்ளிகளில் பணி வரன்முறை தகுதிக்கு அனுப்ப தலைமை ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் பவானி சாகரில் மட்டுமே இருப்பதால் வாய்ப்பு வரும்போது தான் அனுப்ப முடியும். இதற்காக நடவடிக்கையை எடுத்துள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.